Home
You Are Here: Home » News » தேனி அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது‌

தேனி அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது‌

தேனி அருகே சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ கஞ்சாவை கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 பேர் கைது‌ செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் வடக்குபட்டி பகுதியில் இருந்து‌ கேரளாவிற்கு கஞ்சா கடத்து‌வதாக கம்பம் வடக்கு காவல்நிலைய போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது‌. அதன்பேரில், போலீசார் கம்பம் வடக்குபட்டி பகுதியில் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டடிருந்தனர்.

அப்போது‌, அவ்வழியாக வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து‌ விசாரணை செய்தனர். விசாரணையில் கம்பம் பகுதியை சேர்ந்த மகாராஜன் மற்று‌ம் ஈஸ்வரன் என்பது‌ தெரியவந்தது‌.

மேலு‌ம், அவர்களிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ கஞ்சா இருந்தது‌ கண்டுபிடிக்கப்பட்டது‌. இதையடுத்து‌ அவர்களிடமிருந்து‌ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு பேர் மீது‌ வழக்கு பதிவு செய்து‌ சிறையில் அடைக்கப்பட்டனர்.

—–

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top