Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » மாநில அளவிலான எறிபந்து போட்டி, 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு

மாநில அளவிலான எறிபந்து போட்டி, 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே நடைபெற்ற மாநில அளவிலான எறிபந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன.

நெய்‌வேலி அடுத்துள்ள கொள்ளுக்காரன் குட்டை பகுதியில் மாநில அளவிலான எறிபந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 24 அணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் விளையாடினர். இதில் சிறப்பாக விளையாடிய ஆண்கள் 14 பேரும், பெண்கள் 14 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு 15 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. போட்டியில் முதலிடம் பெற்ற அணிக்கும், 2-வது, 3-வது இடங்களை பிடித்த அணிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு எறிபந்து கழகம் மற்றும் கடலூர் மாவட்ட எறிபந்து கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான போட்டி குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கொள்ளுக்காரன் குட்டை வள்ளலார் பதின்நிலை பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்றன. இறுதி போட்டியில் எறிபந்து கழக செயலாளர் பாலவிநாயகம், என்.எல்.சி. திட்ட இயக்குநர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top