Home
You Are Here: Home » News » பெரியகுளம் அருகே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது

பெரியகுளம் அருகே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது

பெரியகுளம் அருகே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீரென உயிரிழந்ததையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்‍.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி மஞ்சளாறு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பகுதியில் உள்ள சசிகுமார் என்பவரது ஒன்றரை வயது குழந்தைக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென அக்குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும்‌, மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் குழந்தை இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தையின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்‍.

குழந்தை இறந்த விவகாரம் குறித்து மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குநர் தெரிவிக்கையில்‌, அப்பகுதியில் உள்ள 85 குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுக்கப்பட்டதில் எந்த குழந்தைக்கும் பாதிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்‍.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top