Home
You Are Here: Home » News » India » கடலூரை புரட்டிப் போட்ட தானே புயல் ஓராண்‌டு ஆகிறது

கடலூரை புரட்டிப் போட்ட தானே புயல் ஓராண்‌டு ஆகிறது

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்‌டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை தானே புயல் தாக்கிய துயர சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்‌டு ஆகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது.பின்னர் அந்த காற்றழுத்த தாழ்வுநிலை, புயலாக மாறி கடலூர் மற்றும் நாகைக்கு இடையே 29 ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்தது. அதன்படிஅன்று 1 மணி அளவில் பலத்த மழையுடன், புயல் காற்று வீசத் தொடங்கியது.புதுவை மற்றும் கடலூர் மாவட்டத்தில், மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்து விழுந்தன. கடலலைகளின் சீற்றத்தால் படகுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மாவட்டம் முழுவதும் இருள் சூழந்தது. மழை நீரில் சாலைகள் ‌அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானார்கள். கடலூர் நகரமே, குண்டு வீச்சினால் பா‌திக்கப்பட்டது போல்‌ சின்னாபின்னமாகி கிடந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்த தானே புயல், முந்திரி விவசாயிகளின் வாழ்க்கையை முற்றிலும் முடக்கிப் போட்டதுதான் பெரும் சோகம். நூற்றாண்டு பழமை கொண்ட லட்சக்கணக்கான முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்ததால்,‌விவசாயமே அழிந்து விட்டது. சேதமடைந்த சாலைகள், வீடுகள் உள்ளிட்டவைகள் சீரமைக்கும் பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகின்றன. தனுஷ்கோடியை அழித்த பின், தனது தாக்கத்தை மீண்டும் தமிழக மக்களுக்கு உணர்த்திய புயல்தான், தானே என்றால் மிகையல்ல. இச்சோக சம்பவம் நிகழ்ந்து முதலாம் ஆண்டு நிறைவடைந்தாலும், நூற்றாண்டு பழைமை வாய்ந்த லட்சக்கணக்கான மரங்கள் நின்று கொண்டிருந்த இடங்கள் எல்லாம், இன்று வெறுமையாக காட்சி அளித்து, புயலின் கோரத்தை மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டு இருக்கின்றன.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top