Home
You Are Here: Home » News » மத்திய அரசின் நடவடிக்கையால் வேதனை – விஜயகாந்த் குற்றச்சாட்டு

மத்திய அரசின் நடவடிக்கையால் வேதனை – விஜயகாந்த் குற்றச்சாட்டு

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு விவசாயிகளை குழப்பும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு டிசம்பர் 31ந் தேதிக்குள் அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருந்தாக கூறியுள்ளார். ஆனால் தற்போது சட்டப் பிரச்சனையை காரணம் காட்டி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் நடவடிக்கையை மத்திய அரசு தள்ளிப்போட்டுள்ளது வேதனை அளிப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து விளம்பரங்கள் வெளியாகியுள்ளதா அவர் கூறியுள்ளார். அந்த விளம்பரங்களில் காவிரி பாசனத்திற்கு நீர் வசதி செய்து கொடுத்துள்ள முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். மேட்டூர் அணையும் மூடப்பட்டுள்ள நிலையில், காவிரியில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் நாளுக்கு நாள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் செயல்படுத்தப்படவில்லை என்று விஜயகாந்த் கூறியுள்ளார். இந்த நிலையில் உண்மையை மறைக்கும் வகையில் ஆளும் கட்சிக்கு ஆதரவான சிலரை தூண்டி விளம்பரம் செய்யும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பேசுவதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பேசாமல் தம்மை அவமானப்படுத்திவிட்டதாக ஜெயலலிதா கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வேண்டும் என்றால் கூடுதல் நேரம் கேட்டுப் பெற்று தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருக்கலாம் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். கொடுக்கப்பட்ட நேரம் முடிந்தும் பேசிக் கொண்டிருந்தால் மணி அடித்து பேச்சை நிப்பாட்டும் வழக்கம் சட்டப்பேரவையிலும் நடைமுறையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே சட்டப்பேரவை நிகழ்வுகளை ஜனநாயக விரோதம் என்று ஜெயலலிதா கூறுவாரா என்றும் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே அனைவரும் தம்மிடம் பணிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா எதிர்பாப்பது நியாயமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top