Home
You Are Here: Home » News » மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நெட்டிமாலை தயாரிக்கும் பணி மும்முரம்

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நெட்டிமாலை தயாரிக்கும் பணி மும்முரம்

திருவாரூர் அருகே மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளை அழகுபடுத்தக்கூடிய நெட்டிமாலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விவசாய நிலங்களில் பயிர்களின் விளைச்சலை உயர்த்த முக்கிய காரணியாக விளங்கும் கால்நடைகளுக்கு மனிதர்கள் நன்றி செலுத்தும் விதமாக பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்தி, கழுத்தில் மணிகள் கட்டி, பொங்கல் வைத்து கோமாதாவை வழிபடுவது வழக்கம். இந்த விழாவில் மாடுகளுக்கு கழுத்தில் நெட்டிமாலை சூடுவது பாரம்பரியமாக நடந்து வருகிறது.

அதன்படி நாளை மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவாரூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் கால்நடைகளை அழகுபடுத்தும் நெட்டிமாலை தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

வருடத்தில் ஒருநாள் மட்டுமே இந்த வேலை உள்ளதால் தங்களுக்கு அரசு உதவி செய்தால் இதுபோன்ற கலைப்பொருட்களை தொடர்ந்து தயாரிக்க முடியும் என அவர்கள் கூறுகின்றனர்.

நெட்டிமாலைகள் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்காக வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top