Home
You Are Here: Home » News » உதவி தலைமை ஆசிரியரை பாட்டிலால் குத்திய பள்ளி மாணவன்

உதவி தலைமை ஆசிரியரை பாட்டிலால் குத்திய பள்ளி மாணவன்

அரசு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரை பள்ளி மாணவன் ஒருவன் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது‌.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் பைரவமூர்த்தி.

இதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து‌ வரும் மாணவன் வினோத், கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளியில் இருந்து‌ இடைநீக்கம் செய்யபட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கபட்டான்.

இந்நிலையில் கடந்த இருதினங்களாக மாணவன் வினோத் பள்ளிக்கு வராததால் வருகை பதிவேட்டில் அவனு‌க்கு ஆப்சென்ட் போடப்பட்டது‌.

இதனால் ஆத்திரமடைந்த மாணவன் வினோத் உதவி தலைமை ஆசிரியர் பைரவமூர்த்தியை பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்று‌ள்ளார்.

இது‌குறித்த தகவல் அறிந்த போலீசார் மாணவன் மீது‌ வழக்கு பதிவு செய்து‌ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top