Home
You Are Here: Home » News » Tamil Nadu » Karur » ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் விஷமருந்தி தற்கொலை

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் விஷமருந்தி தற்கொலை

வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5வயது சிறுமி உள்பட மூன்றுபேர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் காந்திகிராமம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்த சதீஸ்குமார் தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது மனைவி அனிதா, 5வயது மகள் கெளசிகா மற்றும் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி அனிதா தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சதீஸ்குமார், சிறுமி கெளசிகா, மற்றும் சதீஸ்குமாரின் தாயார் பழனியம்மாள் ஆகிய மூவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். சதீஸ்குமாரின் மனைவி அனிதா, திருச்சியில் தேர்வுத்தாள் திருத்தும் பணியை முடித்துவிட்டு, நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மூன்று பேரும் இறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மூன்று பேரின் உடல்களை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top