Home
You Are Here: Home » Cinema » மர்லின் மன்றோ அணிந்த வெள்ளை நிற கவுன் சிறந்த சினிமா அலங்கார உடையாக தேர்வு

மர்லின் மன்றோ அணிந்த வெள்ளை நிற கவுன் சிறந்த சினிமா அலங்கார உடையாக தேர்வு

மர்லின் மன்றோ அணிந்த வெள்ளை நிற கவுன் சிறந்த சினிமா அலங்கார உடையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் செக்ஸ் ஐகானாக வளம் வந்தவர் நடிகை மர்லின் மன்றோ, குழந்தை பருவத்தில் வறுமையில் வளர்ந்த மர்லின், பின்னர் மாடலிங்கில் ஈடுபட்டார். அதன்பின், பாடகியாக, நடிகையாக பல துறைகளில் சிறந்து விளங்கினார்.. இதனைதொடர்ந்து உலகின் மிக பெரிய ஸ்டார் அந்தஸ்து பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சுமார் அரை நூற்றாண்டுகள் கடந்தும் கூட முழு உலகையும் தனது அழகால் வசப்படுத்திய ஹாலிவூட் நடிகை மர்லின் மன்றோவின் மவுசு குறைந்ததாக தெரியவில்லை.. ஏதாவது செய்தி அவரைபற்றி வந்துகொண்டே தான் இருக்கிறது.

தற்போது அவர் அணிந்து இருந்த வெள்ளை நிற கவுன் சிறந்த சினிமா அலங்கார உடையாக தேர்ந்து எடுக்கபட்டு உள்ளது. இந்த உடையை வில்லியம் டிராவில்லா என்ற பேஷன் கலைஞர் 1955 ஆம் ஆண்டு தயாரித்துள்ளார். இந்த கவுன் காற்றில் பறப்பது போன்றும் அதை மன்றோ பிடிப்பது போன்ற புகைப்படம் மிகவும் பிரபலமானது. பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் மூலம் எடுக்கபட்ட ஆய்வில் இத்தகவல் கிடைத்து உள்ளது குறிப்பிடதக்கது.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top