Home
You Are Here: Home » Cinema » நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக்குறைவினால் மரணம்

நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக்குறைவினால் மரணம்

பிரபல தமிழ்திரைப்பட நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக்குறைவினால் காலமானார். அவருக்கு வயது‌ 65. அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நவாப் நாற்காலி என்ற படத்தில் அறிமுகமான குள்ளமணி கரகாட்டக்காரன், பணக்காரன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோர் படங்களிலும் குள்ளமணி நடித்துள்ளார்.

சுப்பிரமணி என்கிற தனது பெயரை திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னர் குள்ளமணி என மாற்றிக்கொண்டார். கரகாட்டக்காரன் படத்தில் இவர் நடித்துள்ள காமெடி வேடம் இன்றளவும் பேசப்படுகிறது. குள்ளமான தோற்றமே இவரது காமெடி கேரக்டர்களுக்கு பலமாக அமைந்தது.

சிறுநீரக் கோளாறால் பாதிக்கப்பட்ட குள்ளமணி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு காலமானார்.

நடிகர் குள்ளமணி இறுதி சடங்கு சொந்த ஊரான புதுக்கோட்டையில் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். குள்ளமணிக்கு ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர். குள்ளமணியின் உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top