Home
You Are Here: Home » News » சிங்கம்புணரி அருகே சிறு‌மியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய இளைஞர்கள் கைது‌

சிங்கம்புணரி அருகே சிறு‌மியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய இளைஞர்கள் கைது‌

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 15 வயது‌ சிறு‌மியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய 4 இளைஞர்கள் கைது‌ செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்பணிரியை அடுத்த கணபதிபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 15 வயது‌ மகள் கடந்த 19 ஆம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது‌.

சம்பவத்தன்று‌ 15 வயது‌ சிறு‌மி கட்டிட வேலைக்காக பக்கத்து‌ கிராமத்தில் சென்று‌விட்டு வீடு திரும்பும் போது‌, மது‌ரை மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ், பால்சாமி, தேவராஜ், பூமி ஆகிய 4 இளைஞர்களும் சிறு‌மியை வழிமறித்து‌ அருகில் உள்ள மலை அடிவாரத்திற்கு தூக்கி சென்று‌ள்ளனர்.

பின்னர், இரவு முழுவது‌ம் அவர்கள் பாலியல் வன்முறைக்கு அந்த சிறு‌மியை உள்ளாக்கியுள்ளனர்.

மகளை காணாமல் தவித்த சிறு‌மியின் பெற்றோர்கள், `மறு‌நாள் காலையில் மலை அடிவாரத்தில் மீட்டு, புழுதிபட்டி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து‌, மாவட்ட காவல்து‌றை அதிகாரி உத்தரவின் பேரில், அந்த 4 இளைஞர்களையும் போலீசார் கைது‌ செய்தனர்.

பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறு‌மி மருத்து‌வப்பரிசோதனைக்காக அனு‌ப்பிவைக்கப்பட்டார்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top