Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன திருவிழாவில் பல்லாயிரக்கண்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷமானது ஆகும். இந்த திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.

முக்கிய திருவிழாவான ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜரும், சிவகாமசுந்தரி தேவியாரும் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து நடனமாடியவாறு திருக்கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுவாமி தரிசனம் 2 மணி நேரம் தாமதமானது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

தஞ்சை மாவட்டம் உடையார்கோவில் கிராமத்திலுள்ள ஸ்ரீகரவந்தீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நடராஜரின் திருநடன நிகழ்ச்சியை பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

About The Author

Number of Entries : 4802

Leave a Comment

© 2013 Captain Media Pvt Ltd

Scroll to top