Home
You Are Here: Home » News » India » தமிழர்களை வெளியேற்றும் கேரள மாநில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பேரணி

தமிழர்களை வெளியேற்றும் கேரள மாநில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பேரணி

கேரளாவில் அட்டப்பாடி பகுதியில் இருந்து தமிழர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடும் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து, திமுக மற்றும் பாஜகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பேரணி நடத்தினர்.

கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அங்குள்ள தமிழர்கள் தங்கள் மாநில ஆதிவாசிகளின் இடத்தை ஆக்கிரமித்ததாக பழிபோட்டு அங்குள்ள தமிழர்களை வெளியேற்றும் முயற்சியில் கேரள மாநில் அரசு முயன்று வருகிறது. இதற்கு திமுக, பாஜக மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கேரளாவில் ஆட்சி நடத்திவரும் காங்கிரஸ் அரசை திமுகவும் பாஜகவும் கண்டித்துள்ளன. இதனிடையே கேரளாவில் இருந்து தமிழர்களை வெளியேற்ற முயற்சி எதுவும் நடைபெறவில்லை என்று கேரள மாநில் முதலமைச்சர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேரள மாநிலம் ஆனைகட்டி பகுதியில் உள்ள தமிழர்கள் இன்னும் ஒருவாரத்தில் வெளியேறவேண்டும் என்றுகூறி தமிழக விவசாயிகளை அங்கிருந்து விரட்ட முயற்சிப்பதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. இதைக் கண்டித்து ஆனைகட்டி கிராமத்தில் திமுக, பாஜகவினர் பேரணி நடத்தினர். கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியை சேர்ந்த காரைக்கால் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திருப்பட்டினத்தில் ரயில்நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இந்த ரயில் நிலையம் திறக்கப்படவில்லை. இந்த புதிய ரயில் நிலையத்தை திறக்க தெற்கு ரயில்வே உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தி கிராம வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்ட்த்தில் ஈடுபட்டன.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top