Home
You Are Here: Home » News » குடியாத்தம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

குடியாத்தம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

குடியாத்தம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

குடியாத்தம் அருகே உள்ள பட்டவார்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம் பெண் கவிதா. இவருக்க 17 வயதான இவருக்கும், மாதானூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜீவ் என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் இன்று காலை அங்குள்ள மண்டபத்தில் திருமணம் நடைறெ இருந்தது.

ஆனால் மணப்பெண்ணுக்கு 17 வயதே திருமணத்தை நிறுத்த கோரி கிராம மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது உத்தரவினக் பேரில் திருமண மண்டபத்துக்கு வநத சமூகநலத்துறை அதிகாரிகள் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சிறுமியின் பெற்றோரை அழைத்து அதிகாரிகள் அறிவுரை கூறினர். இன்று நடைபெற இருந்த திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டதால் இருவீட்டாரின் உறவினர்கள் பெரும் சோகத்துடன் வீடு திரும்பினர்…

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top