Home
You Are Here: Home » Cinema » சகாப்தம் திரைப்படத்தின் பூஜை சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது

சகாப்தம் திரைப்படத்தின் பூஜை சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் சகாப்தம் திரைப்படத்தின் பூஜை சென்னையில் இன்று கோலாகலமாக நடந்து வருகிறது.

சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள ஆண்டாள் அழகர் இல்லத்தில் சகாப்ம் படபூஜை விழா சிறப்பாக நடநது வருகிறது. இதில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி படபூஜையை துவக்கி வைத்தார். இந்த பூஜையில் திருமதி பிரமேலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட ஏராளடானோர் பூஜையில் பங்கேற்றனர்

பூஜையை தொடர்ந்து சகாப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. கதாநாயகன் சண்முகப்பாண்டியன், முதல் காட்சியில் நடித்து, படப்பிடிப்பை தொடங்கினார்.

சகாப்தம் பட பூஜையில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், கேஎஸ் ரவிக்குமார், நடிகர்கள் சத்யராஜ், பிரபு நந்தா,மயில்சாமி உள்ளிட்ட திரைத்துறையினர் கலந்து கொண்டு சகாப்தம் திரைப்படம் மிகபெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பேசினர்…

முன்னதாக சகாப்தம் பட நாயகன் சண்முகபாண்டியனுக்கு, நடிகர்கள் கார்த்தி, விக்ரம் பிரபு, கருணாஸ் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்..

கேப்டன் சினி கிரியேசன்ஸ் தயாரிக்கும் சகாப்தம் திரைப்படத்தை டி.இ.சந்தோஷ்குமார் இயக்குகிறார். சகாப்தம் படத்திற்கான கதையை நவீன் உருவாக்கியுள்ளார். சண்முகபாண்டியனின் சகாப்தம் படத்திற்கான ஒளிப்பதிவு இயக்குனராக எஸ்.கே.ஏ பூபதி பணியாற்ற உள்ளார்.

வசனத்தை ஆர்.வேலுமணி எழுதியுள்ளார். சகாப்தம் படத்தில் சண்முகபாண்டியனுடன் கேப்டன் விஜயகாந்தும் நடிக்க உள்ளார். இதனால் இப்படத்திற்கு பூஜை போடப்படுவதற்கு முன்னதாகவே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top