Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam » திருவாரூரில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 40 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

திருவாரூரில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 40 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

திருவாரூரில் ஆன் லைன் வர்த்தகம் மூலம் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 40 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்‍.

நாகை மாவட்டம் கேதாரிமங்களம் பகுதியை சேர்ந்தவர் அக்பர் அலி. இவர் லைன் வர்த்தகம் மூலம் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கேதாரிமங்களம்‌, ஏனாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 800க்கும் மேற்பட்டவர்கள் இவரை நம்பி பணத்தை இழந்ததாக தெரிய வந்துள்ளது.

ஏனாங்குடி பகுதியில் உள்ள அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் இந்த பணம் இரட்டிப்பாக்கும் முறையை பின்பற்றி ஏமாந்துள்ளனர்‍. கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த சேமிப்பை இழந்து தற்போது தற்கொலையின் விளிம்பில் நின்றுகொண்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்தனர்‍.

இதனிடையே நாகப்பட்டினம் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் அக்பர் அலியை தேடி வந்தனர்‍. இந்நிலையில் தலைமறைவான அக்பர் அலி திருவாரூரில் வருவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை மடக்கி பிடித்துள்ளனர்‍.
———–

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top