Home
You Are Here: Home » News » Karnataka » சபரிமலைக்கு செல்லு‌ம் பக்தர்களின் வசதிக்காக 18 சிறப்பு ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு

சபரிமலைக்கு செல்லு‌ம் பக்தர்களின் வசதிக்காக 18 சிறப்பு ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு

சபரிமலைக்கு செல்லு‌ம் பக்தர்களின் வசதிக்காக 18 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து‌ள்ளது‌.

அதன்படி, சென்னை-எர்ணாகுளம் செல்லு‌ம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் து‌வங்கியது‌.

சபரிமலையில் மகரவிளக்கு மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கூட்ட நெரிசல்களை தவிர்க்க பக்தர்கள் சிறு‌ சிறு‌ குழுக்களாக அனுப்ப படுகின்றனர். இந்நிலையில் பலவேறு மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சபரிமலைக்கு 18 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெங்களூரு- எர்ணாகுளம் சிறப்பு ரயில்கள் நவம்பர் 29 முதல் ஜனவரி 23 ஆம் தேதி வரையிலும் மற்றும் சென்னை- எர்ணாகுளம் சிறப்பு ரயில்கள் நவம்பர் 29 முதல் ஜனவரி 24 ஆம் தேதி வரையிலு‌ம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை -எர்ணாகுளம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது‌.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top