Home
You Are Here: Home » News » Kerala » சித்தி மற்றும் தந்தையால் சித்ரவதை செய்யப்பட்ட குழந்தை வேலூர் மருத்துவமனையில் சிகிக்சை முடிந்து சொந்த ஊர் திரும்பியது

சித்தி மற்றும் தந்தையால் சித்ரவதை செய்யப்பட்ட குழந்தை வேலூர் மருத்துவமனையில் சிகிக்சை முடிந்து சொந்த ஊர் திரும்பியது

சித்தி மற்றும் தந்தையால் சித்ரவதைக்கு ஆளாகு பாதிக்கப்பட்ட 5 வயது குழந்தை வேலூர் மருத்துவமனையில சிகிக்சை பெற்று உடல் தேரிய நிலையில் சொந்த ஊர் திரும்பியது.

கேரள மாநிலம் குமுளி பகுதியை சேர்ந்தவர் ரபீக். இவர் தனது இரண்டாவது மனைவியின் பேச்சை கேட்டு, தனது முதல் மனைவி மூலம் பிறந்த 5 வயது குழந்தையான சபீக்கை மிக கொடூரமான முறையில் துன்புறுத்தினார்.

இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பாதிப்புக்குள்ளான அந்த குழந்தையை தத்தெடுத்த கேரள அரசு, அவனை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தது. கடந்த 3 மாதமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது அந்த சிறு‌வனின் உடல்நிலை தேறியுள்ளது‌.

இதையடுத்து மருத்துவ குழுவினர் அந்த குழந்தையை சொந்த மாநிலத்திற்கு வழி அனுப்பி வைத்தனர். இந்த குழந்தை அங்குள்ள மத்திய அரசின் குழந்தைகள் காப்பகத்தில் வைத்து வளர்க்கப்படும் என்று அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top