Home
You Are Here: Home » News » வேலூரில் 5வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவதால் பெரும் பரபரப்பு

வேலூரில் 5வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவதால் பெரும் பரபரப்பு

5வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் காகிதபட்டறை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது 5வயது மகள் கீர்த்தனா, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 17வயது இளைஞர் மணி, சிறுமி கீர்த்தனாவை அழைத்து சென்று தவறான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மணியை தீவிரமாக தேடி வருகின்றனர். 5வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top