Home
You Are Here: Home » News » ஆம்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை கொள்ளை

ஆம்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை கொள்ளை

வேலூர் மாவட்டம் ஆம்பூரில், ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் ஆயிஷா நகரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் இப்ராஹிம், வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு வந்துள்ளார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையர்கள், பீரோவிலிருந்த 12 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை திருடி சென்றனர்.

ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். காவல் நிலையத்தில் ஏராளமான திருட்டு புகார்கள் குவிந்து வருவதாகவும், ஆனால் கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top