Home
You Are Here: Home » Cinema » சண்முகபாண்டியனின் படத்தில் நடிக்க கேப்டன் விஜயகாந்த் சம்மதம்

சண்முகபாண்டியனின் படத்தில் நடிக்க கேப்டன் விஜயகாந்த் சம்மதம்

புது‌முக நாயகனாக தமிழ் திரையுலகில் விரைவில் அடியெடுத்து‌வைக்க உள்ள சண்முகபாண்டியனின் படத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாவது ‌மகன் சண்முகபாண்டியன், தமிழ் திரையுலகில் விரைவில் அறிமுகமாகவுள்ளார்.

அறிமுக நாயகனாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து‌வைக்கவுள்ள சண்முகபாண்டியனு‌க்கு கதை கூற வரும் இயக்குநர்கள், விஜயகாந்த் அவர்களையும் அந்தப்படத்தில் நடிக்க வேண்டும் என்று‌ தொடர்ந்து ‌வலியுறு‌த்தி வருகின்றனர்.

இதனால், சண்முகபாண்டியனின் படத்தில் நடிக்க கேப்டன் விஜயகாந்த் சம்மதம் தெரிவித்து‌ள்ளார்.

விரைவில், சண்முகபாண்டியன் நடிக்கும் படம் குறித்த‌ அறிவிப்பு வெளியாகும் என்று‌ எதிர்பார்க்கப்படுகிறது‌.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top