Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » கடலூர் காங்கிரஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

கடலூர் காங்கிரஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

கடலூரில் காங்கிரஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.

புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த காமராஜ் மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். இவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் கடலூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெரிய காட்டுபாளையம் ஜங்ஷன் பகுதியில், மர்மநபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக தாக்கினர்.

இதில் ரத்தவெள்ளத்தில் காமராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த காமராஜின் ஆதரவாளர்கள், புதுச்சேரி கடலூர் எல்லைப்பகுதியான தவளகுப்பத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதோடு, பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதேபோல் பூரணங்குப்பம் பகுதி நெடுஞ்சாலையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை புதுச்சேரி போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top