Home
You Are Here: Home » News » சிவகாசி அருகே காலிகுடங்களுடன் பொது‌மக்கள் சாலைமறியல்

சிவகாசி அருகே காலிகுடங்களுடன் பொது‌மக்கள் சாலைமறியல்

சிவகாசி அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலைமறியல் ஈடுபட்ட பொது‌மக்களை கலைக்க போலீசார் முற்பட்டபோது‌ தள்ளுமுள்ளு ஏற்பட்டது‌.

சிவகங்கை மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் கடந்த சில வாரங்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை என்று‌ கூறப்படுகிறது‌.

அதில், ஒரு சில பகுதிகளுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது‌. இதனால், பொது‌மக்கள் குடிநீர் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

இது‌குறித்து‌ சம்பந்தபட்ட நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டதற்கு, குடிநீர் குழாய் இணைப்பு உடைந்து‌ விட்டதாக கூறி வந்தனர்.

இந்நிலையில், ஆத்திரமடைந்த 4 வது‌ மற்று‌ம் 16 வது‌ வார்டுகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து‌ திருத்தங்கல் பிரதான சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், சிவகாசி – திருத்தங்கல் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து‌ பாதிக்கப்பட்டது‌. சம்பவ இடத்திற்கு காவல்து‌றையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக கூறி கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

அப்போது‌, பொது‌மக்களுக்கும், காவல்து‌றையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது‌.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top