Home
You Are Here: Home » News » Tamil Nadu » Namakkal » உதகையில் தொடர் மழையால் ரோஜா மலர்கள் அழுகியது சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உதகையில் தொடர் மழையால் ரோஜா மலர்கள் அழுகியது சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உதகையில தொடர்ந்து பெய்த மழையால் ரோஸ் பூங்காவில் உள்ள ரோஜா மலர்கள் ஆயிரக்கணக்கில் அழுகியும் உதி்ர்ந்தும் சேதமடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

மலைகளின் அரசியாக என அழைக்கப்படும் உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவுக்கு செல்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். ரோஸ் பூங்காவில் உள்ள 36 ஆயிரம் செடிகளில் 4 ஆயிரம் பூக்கள் உள்ளன. இதில் சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை நிற ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவரக்கூடியவை. இந்த மலர்களை காண நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமான அளவில் குவிந்தனர்.

ஆனால் கடந்த 10 நாட்களாக பெய்த மழையால் இந்த பூங்காவில் உள்ள ரோஜா மலர்கள் ஆயிரக்கணக்கில் அழுகியும் உதிர்ந்தும் சேதமடைந்துள்ளன. இதனால் ரோஜா மலர்களை காண ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

அழுகியுள்ள ரோஜா மலர்களை காண வந்த சுற்றுலா பயணிகளிடம் தோட்டக்கலைத்துறையினர் கட்டணமாக 30 ரூபாய் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பல இடங்களில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்துள்ளது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. இந்த மழை மானாவாரி பயிர்களுக்கு மிகவும் நல்லது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையால் இங்குள்ள முக்கிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. பாபநாசம் அணையில் ஒரே நாளில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது. இதேபோல மணிமுத்தாறு அணையில் 3அடியும், சேர்வலாறு அணையில் 5 அடியும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

143 அடி உயரம் உள்ள பாபநாசம் அணையில் தற்போது 80 அடியும், மணிமுத்தாறு அணையில் 59 அடியு்ம் நீர் இருப்பு உள்ளது.

இதேபோல தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இந்த அணையின் மொத்த உயரம் 126 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவு் 100.33 மில்லியன் கனஅடியாகும், தற்போது அணைக்கு வினாடிக்கு 19 கனஅடிவீதம் தண்ணீர் வருகிறது. அதே அளவு நீர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது அணையிலிருந்து பெரியகுளம் பகுதி குடிநீருக்காக 3 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top