Home
You Are Here: Home » News » Tamil Nadu » Coimbatore » நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாவட்டந்தோறும் தே.மு.தி.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாவட்டந்தோறும் தே.மு.தி.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாவட்டந்தோறும் தே.மு.தி.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

கேப்டன் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க தேனி மாவட்ட தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உளுந்தூர் பேட்டை மாநாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட தே.மு.தி.க சார்பில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தே.மு.தி.கவிற்கு புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் தேர்தல் நிதி வசூலிப்பது உள்ளிட்ட அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தே.மு.தி.கவிற்கு புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் தேர்தல் நிதி வசூலிப்பது உள்ளிட்ட அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

தஞ்சை வடக்கு மாவட்ட தே.மு.தி.க சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தே.மு.தி.கவிற்கு புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் தேர்தல் நிதி வசூலிப்பது உள்ளிட்ட அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

கோவை மாநகர் மாவட்ட தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தே.மு.தி.கவிற்கு புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் தேர்தல் நிதி வசூலிப்பது உள்ளிட்ட அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றிய தேமுதிக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை கவனிப்பது உள்பட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top