Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » விருதாசலத்தில் இளம்பெண் கற்பழிப்பு

விருதாசலத்தில் இளம்பெண் கற்பழிப்பு

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் காதலனைக் கட்டிப்போட்டு விட்டு இளம்பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதாச்சலத்தில் மணிமுத்தாற்றின் கரையில்தான் இந்த பாலியல் வன்கொடுமை அரங்கேறியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த சுகந்தியும் பாக்கியராஜும் காதலித்து வந்தனர். சம்பவத்தன்று அவர்கள் மணிமுத்தாற்றின் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த முருகன், சதீஷ், முத்து ஆகிய மூன்று பேரும் பாக்கியராஜின் கைகளை கட்டிப்போட்டு விட்டு சுகந்தியை பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில் 3 பேரில் முத்து என்பவனையும் அவனது கூட்டாளிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தலை மறைவாய் உள்ள முக்கிய குற்றவாளிகளான முருகன் மற்றும் சதீஷை விருதாசலம் போலீசார் தேடி வருகின்றனர். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நிகழும் பாலியல் குற்றங்கள் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

About The Author

Number of Entries : 5552

Comments (1)

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top