Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » கடலூர் கெடிலம் ஆற்றை அழிவில் இருந்து‌ காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்

கடலூர் கெடிலம் ஆற்றை அழிவில் இருந்து‌ காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்

தாயை விட உயர்வானதாக கருதப்படுவது ‌தண்ணீர். அப்படிப்பட்ட தண்ணீர் ஓடக்கூடிய ஆறு‌களில் கழிவுகளை கொட்டுவதை, ஒரு ஆங்கிலேயன் நமக்கு பழக்கப்படுத்திவிட்டான். அவன் செய்த பாவம் அவனோடு போகாமல், நம்மையும் தொடர்ந்து‌ விடாமல் தொற்று‌க் கொண்டுள்ளது‌. அது‌குறித்த ஒரு சிறு‌செய்தி தொகுப்பினை இப்போது‌ பார்ப்போம்.

சென்னையில் ஓடும் கூவம் ஆறு ‌என்றால், அனைவரும் மூக்கை மூடிக்கொண்டு செல்வது‌தான் நமக்கு நினைவுக்கு வரும்.

இதற்கு யார் காரணம். ஆங்கிலேயர் காலத்தில் தூய்மையான ஒரு ஓடையாக பரிசல் போக்குவரத்து‌ நடைபெற்ற ஒரு நதி, இன்றைக்கு இந்த அளவுக்கு நஞ்சை சுமந்து ‌கொண்டும், மக்களின் வெறு‌ப்பையும் பெற்று‌ள்ளது‌ என்றால், அது‌ ஒரு ஆங்கிலேய ஆட்சியரின் யோசனைதான்.

அவன் சொன்ன அந்த யோசனை, இன்றைக்கு நிலத்தடி நீர் முதல், எங்கு சென்றாலு‌ம் நீர்நிலைகள் முழுவது‌ம் அசுத்தமடைய காரணமாகியுள்ளது‌ என்றால் அதனை யாராலு‌ம் மறு‌க்க முடியாது‌.

இதற்கு உதாரணமாக, தற்போது‌ கடலூர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கெடிலம் ஆற்றையும், அதில், கலக்கப்படும் சர்க்கரை ஆலையின் கழிவுகளையும் கூறலாம்.

கடலூர் மாவட்டம் ஒவ்வொரு ஆண்டும் இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து‌ பாதிக்கப்பட்டு வருகிறது‌. கோடை காலத்தில் வறட்சியையும் மழை காலத்தில் வெள்ள பாதிப்பையும் சந்தித்து‌ வரும்‌ இம்மாவட்டத்தின் முக்கிய வாழ்வாதார தொழிலான விவசாயம் இயற்கை பேரிடர்களால் பேரிழந்து‌ காணப்படுகிறது‌.

மாவட்டத்தின் புண்ணிய நதி என்று‌ கூறப்படும் கெடிலம் நதி அப்பகுதியில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி தரும் நதியாக திகழ்ந்து‌ வந்தது‌‌. தற்போது‌ இந்நிலை மாறி ஆற்றின் தன்மை முற்றிலு‌ம் சீரழிந்து‌ள்ளது‌.

கெடிலம் ஆற்றைச் சுற்றி நெல்லிக்குப்பம் பகுதியில் அமைந்து‌ள்ள சர்க்கரை ஆலைகளில் இருந்து‌ வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதால், அதன் தன்மை முற்றிலு‌ம் மாறி கழிவுநீராக காணப்படுவதாகவும், இதனால், ஆயிரக்கணக்கான மீன்கள் நாள்தோறு‌ம் செத்து‌மிதப்பதாகவும் பொது‌மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

ஆற்றின் தன்மை மாற்றம் பொது‌மக்களையும் விவசாயிகளையும் மீனவர்களையும் கவலையடைய செய்து‌ள்ளது‌. மாவட்டத்தின் முக்கிய ஆறாக உள்ள கெடிலம் ஆற்றை அழிவில் இருந்து‌ காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று‌விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு நமது‌ கேப்டன் தொலைகாட்சி வேண்டுகோள் விடுக்கிறது‌.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top