Home
You Are Here: Home » News » பெண் குழந்தையை பெற்றோரே 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம்

பெண் குழந்தையை பெற்றோரே 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பிறந்து ஒன்றரை மாதமேயான பெண் குழந்தையை பெற்றோரே 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்னம் அருகே உள்ள கரம்பியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிக்கு 3 பெண்குழந்தைகளும், 2 ஆண்குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த முத்துலட்சுமிக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே 3 பெண்குழந்தைகள் உள்ளதால் பிறந்த பெண் குழந்தையை மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் மூலம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

இதனிடையே, குழந்தையை பார்க்க வந்த உறவினர்களும், பொதுமக்கள் குழந்தை விற்கப்பட்டதை அறிந்து அதி்ர்ச்சி அடைந்தனர்.

(பைட்-முருகேசன் கரம்பியம்)

தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது விற்கப்பட்ட பெண் குழந்தையை மீட்க உத்தரவிட்டார்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top