Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » என்.எல்.சி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறு‌த்தம்

என்.எல்.சி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறு‌த்தம்

என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறு‌த்தத்தில் ஈடுபட உள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவன 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்‍. தொழிற்சங்கத்தினரும் கடந்த 5 நாட்களாக வாயிற்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையி்ல் புதுச்சேரியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதனால்‌, ஏற்கனவே அறிவித்தபடி, இன்று இரவு 10 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்‍.

என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசு நிறுவனங்களுக்கு விற்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதால்‌, தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடுமாறு மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கேட்டுக்கொண்டுள்ளார்‍.

இந்நிலையில், என்‍.எல்‍.சி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன்‌, தமிழ்நாட்டில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயமும் ஏற்படும்‍.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top