Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » என்எல்சி பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்க முடிவு அனைத்து‌ தொழிற்சங்கத்தினரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

என்எல்சி பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்க முடிவு அனைத்து‌ தொழிற்சங்கத்தினரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி என்எல்சி பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து‌ தொழிற்சங்கத்தினரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அரசு பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்யப்போவதாக கடந்த மாதம் அறிவித்தது. ஆனால் இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

என்எல்சி பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை இரவு 10 மணிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தொழிற்சங்கங்கள் கடந்த 25ம் தேதி அறிவித்தன.

மேலும் இது தொடர்பான பல்வேறு போராட்டங்களையும் என்எல்சி தொழிலாளர்கள் கடந்த 27-ம் தேதி முதல் நடத்தி வரும் நிலையில், இன்று‌ அனைத்து‌ தொழிற்சங்கத்தினர் இணைந்து‌, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(பைட்- ராஜவன்னியன் தொமுச தொழிற்சங்க பொதுச்செயலாளர்)

நாளை இரவு 10 மணி முதல் என்எல்சி தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும் என்று‌ கூறியுள்ள தொழிற்சங்கத்தினர், ஒரு சதவீத பங்குகளை கூட விற்க விட மாட்டோம் என்று‌ம் உறு‌திபட கூறியுள்ளனர்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top