Captain News » Sports

6 வது ஐபிஎல் கிரிக்கெட் கோப்பையை தட்டிச்செல்வது யார்
6 வது ஐபிஎல் கிரிக்கெட் கோப்பையை தட்டிச்செல்வது  யார் என்று ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. கடந்த மாதம் 3-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 9 அணிகள் பங்கேற்றன. 19-ந்தேதி ‘லீக்’ ஆட்டம் முடிவடைந்தது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 4 அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

21-ந்தேதி நடந்த  ‘பிளேஆப்’ சுற்று ஆட்டத்தில்  மும்பை அணியை வீழ்த்தி சென்னை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி ஐதராபாத்தை வென்றது. இதன் மூலம் ஐதராபாத் அணி வெளியேற்றப்பட்டது.

நேற்று நடந்த ‘குவாலிபையர் 2′ ஆட்டத்தில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில் இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி 3-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 2010, 2011-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்னை அணி தகுதி பெற்றுள்ளது.

மும்பை அணி முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. 2-வது முறையாக அந்த அணி இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.  2010-ம் ஆண்டு மும்பை அணி சென்னையிடம் தோல்வி கண்டது. இரு அணிகளும் சம பலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபில் கோப்பையை யார் வெல்வார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

குருநாத் மெய்யப்பனை மும்பை போலீசார் நேற்றிரவு கைது‌
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பனை மும்பை போலீசார் நேற்றிரவு கைது‌ செய்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடந்த ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக சென்னை அணி உரிமையாளர் குருநாத் மெய்யப்பனுக்கு மும்பை போலீசார் நேற்று‌ முன்தினம் சம்மன் அனுப்பியிருந்தனர். அதில் நேற்று‌ மாலை 5 மணிக்குள் மும்பை போசீலில் சரண் அடைய உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து‌, நேற்று‌ மாலை மதுரை விமான நிலையம் வழியாக மும்பைக்கு கால தாமதமாக சென்ற குருநாத், மும்பை குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார்.

ஸ்பாட் பிகர்சிங் விகாரத்தில் பாலிவுட் நடிகர் தாராசிங்கின் மகன் விண்டூ ஏற்கெனவே கைதாகியுள்ளார். இவருக்கும், குருநாத் மெய்யப்பனுக்கும் இடையேயான தொடர்புகள் குறித்து மும்பை போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து  சில உண்மைகள் வெளிவந்ததையடுத்து‌,  சென்னை சூப்பர் கிங்ஸ்சின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன்  கைது செய்யப்பட்டார்.  கூட்டுச்சதி மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ்  அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குருநாத் மெய்யப்பனை இன்று‌ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து‌ விசாரிக்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது‌ செய்யப்பட்ட குருநாத் மெய்யப்பன், பிபிசிஐயின் தலைவர் ஸ்ரீநிவாசனின் மருமகன் ஆவார்.  இதையடுத்து பி.சி.சி. ஐ. தலைவரும், குருநாத் மெய்யப்பனின் மாமனாருமான சீனிவாசன் பதவி விலக வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சீனிவாசன் கூறுகையில்,நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று‌ம்,  இந்த விவகாரத்தில் எனது மருமகனை வைத்து என்னை பழிவாங்கிட சதிதிட்டம் நடக்கிறதுஎன்றார்.

சீனிவாசன் பதவி விலக வேண்டும் என தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் சிலரும் சீனிவாசனுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.  எனவே ஸ்பாட் பிக்சிங் விவகாரம் பரபரப்பான கட்டத்தை எட்டிவருகிறது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது
டெல்லியில் நேற்று‌‌ நடைபெற்ற இரண்டாவது பிளே ஆஃப் ஐபிஎல் போட்டியில்  ராஜஸ்தான் ரோயல்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது‌.

இதன் மூலம் ராஜஸ்தான், மும்பை இந்தியன்ஸுடன் மோதும் அரையிறு‌தி வாய்ப்பை பெற்றிருக்கிறது.

முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 132 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டவான் 33 ரன்களையும், வைட் 31 ரன்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் மாலிக் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதையடுத்து‌ களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆரம்பத்தில் அதிரடியாக களமிறங்கியது. 6 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது. வட்சன் 24 ரன்களையும் டிராவிட் 12 ரன்களையும் எடுத்தனர். ராஹேன் 18 ரன்களை எடுத்தார். எனினும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்ததை அடுத்து அந்த அணி தடுமாறியது.

ஒரு கட்டத்தில் 10 ஓவர்கள் முடிவில் 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. எனினும் அதிரடியாக களமிறங்கிய பிராட் ஹாட்ஜ் 29 பந்துகளில் 54 ரன்களை எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இதில் 2 பவுன்றிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலையில் முதல் இரு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார் ஹாட்ஜ். இன்றைய வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இம்முறை ஐபிஎல் போட்டிகளில் புதிய அணியாக களமிறங்கி கடும் போராட்டத்தின் பின்னர் பிளேஆஃப் வரை முன்னேறிய சன்ரைசர்ஸ் அணியின் எதிர்பார்ப்பு நேற்றைய போட்டியுடன் முடிவுக்கு வந்தது. ஆறாவது ஐபிஎல் தொடரை விட்டு நாக் அவுட்டில் வெளியேறியது.

நாளை மும்பை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. அதில் வெற்றி பெறும் அணி சென்னையுடன் இறுதிப்போட்டியில் மோதும்.

பிளே-ஆப் சுற்றில் இன்று‌ ராஜஸ்தான் ராயல்ஸ் மற்று‌ம் சன் ரைசர்ஸ் அணிகள் மோது‌கின்றன.
ஐபிஎல் போட்டியின் பிளே-ஆப் சுற்றில் இன்று‌ ராஜஸ்தான் ராயல்ஸ் மற்று‌ம் சன் ரைசர்ஸ் அணிகள் மோது‌கின்றன.

டெல்லியில் இன்று‌ இரவு 8 மணிக்கு பிளே-ஆப் போட்டியின் இரண்டாவது‌ ஆட்டம் நடைபெறு‌கிறது‌. இந்தப்போட்டியில் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில், 3-வது‌ இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,  4-வது‌ இடத்தில் உள்ள சன் ரைசர்ஸ் அணியும் மோது‌கிறது‌.

இன்றைய போட்டியில் வெற்றி பெறு‌ம் அணி,  நேற்று‌ நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்ற மும்பை அணியுடன் வரும் 24-ம் தேதி மோது‌ம்.

அந்தப்போட்டியில் வெற்றி பெறு‌ம் அணியே, 26-ந்தேதி நடைபெறவுள்ள இறு‌திப்போட்டியில் சென்னை அணியுடன் பலப்பரிட்சை நடத்து‌ம் என்பது‌ குறிப்பிடத்தக்கது‌.

முன்னதாக நேற்று‌ நடைபெற்ற முதல் பிளே-ஆப் சுற்றில், சென்னை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 1 விக்கெட்டினை மட்டும் இழந்து 192 ரன்கள் எடுத்தது. மைக் ஹஸி 86 ரன்களையும், சுரேஷ் ரைனா 82 ரன்களையும் அதிரடியாக குவித்தனர்.

இதையடுத்து‌, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆட்டத்தை தொடக்கியது.

ஸ்மித் 28 பந்துகளில் 6 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடித்து‌ 68 ரன்கள் குவித்தார். எனினும் ஜடேஜா பந்து‌வீச்சில், ஸ்மித் ஆட்டமிழக்கவே. ஆட்டத்தின் போக்கு அதிரடியாக திசை மாறியது.

இறுதியில் 18.4 ஓவர்களில் அனைத்து‌ விக்கெட்டுக்களையும் இழந்து மும்பை அணி, 144 ரன்களை மட்டுமே எடுத்து‌, 48 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியடைந்தது‌.

இதனால், வருகின்ற 26-ம் தேதி நடைபெறு‌ம் ஐபிஎல் இறு‌திப்போட்டிக்கு, சென்னை அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

சென்னை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது
சென்னை – மும்பை அணிகளுக்கு இடையே நேற்று‌ டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 1 விக்கெட்டினை மட்டும் இழந்து 192 ரன்கள் எடுத்தது. மைக் ஹஸி 86 ரன்களையும், சுரேஷ் ரைனா 82 ரன்களையும் அதிரடியாக குவித்தனர்.

இதையடுத்து‌, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆட்டத்தை தொடக்கியது.

ஸ்மித் 28 பந்துகளில் 6 பவுன்றிகள், 5 சிக்ஸர்கள் அடங்களாக 68 ரன்களை எடுத்தார். எனினும் ஜடேஜா, ஸ்மித்தை ஆட்டமிழக்க செய்ததும் அதிரடியான போட்டி திசை மாறியது.

இறுதியில் 18.4 ஓவர்களில் அனைத்து‌ விக்கெட்டுக்களையும் இழந்து 144 ரன்களை மட்டும் மும்பை அணி எடுத்தது‌. இதன் மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை சென்னை வீழ்த்தி வெற்றி பெற்றது‌.

பந்துவீச்சில் ஜடேஜா, பிராவோ தலா 3 விக்கெட்டுக்களையும் மோஹித் ஷர்மா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் வென்றதன் மூலம் சென்னை அணி நேரடியாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று‌ ராஜஸ்தான் – ஐதராபாத் அணிகளுக்கு இடையில் இடம்பெறும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மும்பை மீண்டும் விளையாடவுள்ளது.

அதில் வெற்றி பெறும் அணியுடன் சென்னை இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.

ப்ளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில், மும்பை-சென்னை அணிகள் எதிர்கொள்கின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று‌ தொடங்கும் ப்ளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில், மும்பை-சென்னை அணிகள் எதிர்கொள்கின்றன.

சூதாட்ட சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும் 6 வது‌ ஐபிஎல் போட்டியில் லீக் ஆட்டங்களும் ஒரு வழியாய் முடிந்து சென்னை, மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 6-வது  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து ப்ளே ஆப் சுற்று போட்டிகள் இன்று‌ முதல் தொடங்குகிறது.

இவற்றில் முதலிரண்டு இடங்களை பிடித்த சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் முக்கிய போட்டி இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இன்றைய பிளே ஆப் சுற்றில் மும்பை-சென்னை அணிகள் மோது‌கின்றன.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்‍. தோல்வியடையும் அணி 2வது தகுதி சுற்றில் விளையாடும் என்பது குறிப்பிடதக்கது.

ஐ.பி.எல். சூதாட்டத்திற்கு தண்டனை வழங்க புதிய சட்டம் – பிசிசிஐ
ஐ.பி.எல். சூதாட்டத்திற்கு தண்டனை வழங்க புதிய சட்டம் கொண்டு வர பிசிசிஐ நடவடிக்கை எடுத்து‌ள்ளது‌.

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த, ஐ.பி.எல். போட்டியில் தற்போது சூதாட்ட பூகம்பம் கிளம்பியிருப்பதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சூதாட்ட வீரர்களுக்கு தடை மட்டுமே விதிக்கப்பட்டு அவர்களை விட்டுவிடுவதால், அந்த குற்றம் மீண்டும் நடைபெறுவதை தடுக்க முடியவில்லை.

தரகர்களையும் தண்டிக்க கடுமையான சட்டம் இல்லை. எனவே, கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க கடும் சட்டம் தேவை என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

அத்தகைய கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு, பி.சி.சி.ஐ. கடிதம் எழுத உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நாளை தொடங்கும் ப்ளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில், மும்பை-சென்னை அணிகள் எதிர்கொள்கின்றன.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 6-வது  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்குகிறது.

ப்ளே ஆப் சுற்று போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ்‌, மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதரபாத் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் ஐதரபாத் அணி,  கொல்கத்தாவை வீழ்த்தியதால்‌, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இதேபோல் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி மற்றும் பஞ்சாப்‌,  புனே, டெல்லி ஆகிய அணிகளும் வெளியேறியது.

இந்நிலையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள ப்ளே ஆப் சுற்றுப் போட்டியில்,   புள்ளி பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ள சென்னை அணியும்‌, இரண்டாவது இடத்தில் உள்ள மும்பை அணியும் மோதுகிறது.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்‍. தோல்வியடையும் அணி 2வது தகுதி சுற்றில் விளையாடும் என்பது குறிப்பிடதக்கது.

கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக டில்லி போலீசார் மேலும் மூன்று பேரை கைது செய்து‌ள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முன்னாள் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடிய வீரர் எனவும், இந்த விவகாரத்தில், ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்ற வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அஜித் சண்டிலா 4 புக்கிகளுடன் தொடர்பில் இருந்தார் எனவும் கூறியுள்ளனர்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்கள் மூன்று நபர்கள் சுனில் பாட்டியா, கிரண் மற்றும் மணீஸ் ஆகியோரை ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தை அடுத்து ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் விதி முறைகள் மாற்றம் செய்வது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல், விளையாட்டுதுறை அமைச்சர் ஜிதேதந்திரா சிங்குடன் ஆலோ‌சனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. `

கிரி‌க்கெட் போட்டியில் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ‌என்றம், மேலும் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர‌ வேண்டும் என்றார். சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதில் புதிய சிக்கல் இருப்பதால் அனைத்து ‌‌விளையாட்டுகளிலும் திருத்தம் கொண்டு வர புதிய சட்ட கொண்டு வர வேண்டும் ‌என்றார்.

அது மட்டுமின்றி கிரிகெட்டில் பல கோடி மக்கள் வைத்துள்ள நம்பிக்கை காப்பாற்றபட வேண்டும் என்றும் சட்டத்துறை அமைச்சர் கபில் சிபில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியி்ல் கூறினார்.

ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில், நடந்த பணிபரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். மும்பை மற்றும் டில்லி போலீசாரின் அறிக்கையை ஆராய்ந்த பின்னர், பணப்பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

முன்னதாக, நேற்று‌ சென்னையில் நடைபெற்ற  பி.சி.சி.ஐ.யின் ஆலோசனை கூட்டத்தில் கிரிக்கெட் வாரிய தலைவர் ஸ்ரீனிவாசன்  பேசுகையில், சூதாட்ட தரகர்களை பி.சி.சி.ஐ.யால் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்தார். தற்போது எழுந்துள்ள கிரிக்கெட் சூதாட்டம் புகார்  தொடர்பாக விசாரணை நடத்த கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சவானி தலைமையில் குழு  அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று‌, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
ஹைதராபாத்தில் நேற்று‌  நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று‌, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக யூசுப் பதான் ஆட்டம் இழக்காமல் 29 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 49 ரன் குவித்தார்.

பிஸ்லா 15 ரன்னும், காம்பிர் 10 ரன்னும், காலிஸ் 24 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும் என்ற நிலையில் இருந்த ஹைதராபாத் அணிக்கு, கோல்கத்தா அணி எளிய  வெற்றி இலக்கையே நிர்ணயித்தது.

இதை அடுத்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியில், துவக்கம் மிக அருமையாக அமைந்தது.

துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சிறப்புடன் விளையாடி அணிக்கு வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினர். படேல் 37 பந்துகளில் 47ரன்களும், தவான் 35 பந்தில் 42 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய, விகாரி, வைட், பெரேரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும், சமி 17 ரன் அடித்து ஹைதராபாத் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அந்த அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஹைதராபாத் அணி, புள்ளி பட்டியலில் 4 வது இடத்தைப் பிடித்து, பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

ஏற்கெனவே சென்னை, மும்பை, ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

முன்னதாக, நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், டெல்லி – புனே அணிகள் மோதின.  புனே சுப்ரதா ராய் சஹாரா மைதானத்தில் நேற்று மாலை நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற புனே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.

இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் புனே அணி புள்ளி பட்டியலில் 8வது இடத்தையும், டெல்லி அணி கடைசி இடத்தையும் பிடித்தன. நேற்று‌டன் ஐபிஎல் லீக் போட்டிகள் மட்டும் முடிவடைந்தது‌.