Captain News

இலங்கை அரசிடம் இருந்து கச்சதீவை மீட்க முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம்
இலங்கை அரசிடம் இருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 1947 ம் வருடம் இந்தியா- இலங்கை ஒப்பந்ததின் படி கச்சத்தீவு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்களுக்கு ஆளாகி வருவதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் கச்சத் தீவை இந்தியா தமது ஆளுகையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.  எனவே கச்சத்தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்  ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மீட்கப்பட்ட பின்னர் இலங்கை உடனான சர்வதேச கடல் எல்லையை மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதா தாம் எழுதியுள்ள கடிதத்துடன் கச்சதீவை மீட்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் அனுப்பியுள்ளார்.

ஜூலை மாதம் 2013-2014-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்கிறது‌.
கர்நாடக காங்கிரஸ் அரசு வரும் ஜூலை மாதம் 2013-2014-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்கிறது‌.

கடந்த பிப்ரவரி மாதம் முந்தைய பாஜக அரசின் முதல்வர் ஜெகதீஷ் செட்டர் 2013-2014-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததால், காங்கிரஸ் கட்சி பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது‌.

இது‌குறித்து‌ செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சித்தராமைய்யா, இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய பல வளர்ச்சித்திட்டங்கள் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், அதோடு மட்டுமல்லாமல், அந்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடந்த ஆட்சியில் மாநிலத்தின் தேவை என்ன என்பதை அறியாமல், ஜெகதீஷ் செட்டர் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்ததாகவும், ஆனால், தாம் இந்த முறை அது‌போல் பட்ஜெட் தாக்கல் செய்யாமல், மாநிலத்தின் தேவை என்ன, பிரச்சனை என்ன என்பது‌ குறித்து‌ ஆய்வு செய்து‌ அதனடிப்படையில் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளதாக கூறினார்.

தனது‌ தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு, மிகப்பெரிய பிரச்சனையாக காவிரி பிரச்சனை உள்ளதாக கூறிய சித்தராமைய்யா, இந்த விவகாரம் குறித்து‌ உச்சநீதிமன்றம் அளித்து‌ள்ள தீர்ப்பை எதிர்த்து‌, மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால், காவிரி விவகாரத்தில், கர்நாடக அரசின் பிடிவாதம் தொடர்வதால், டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில், சிக்கல் நீடித்து‌ வருகிறது‌.

தங்கத்தின் விலை இன்று‌ ச‌வரனுக்கு அதிரடியாக 600 ரூபாய் உயர்ந்து‌ள்ளது.‌
கடந்த ஒரு வாரமாக குறைந்து‌ வந்த தங்கத்தின் விலை இன்று‌ ச‌வரனுக்கு அதிரடியாக 600 ரூபாய் உயர்ந்து‌ள்ளது.‌

22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு 600  ரூபாய் உயர்ந்து‌ 20 ஆயிரத்து‌ 112  ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் ஒரு கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து‌ ‌ 2 ஆயிரத்து‌ 514 ரூபாயாக விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 79 ரூபாய் உயர்ந்து‌ 2 ஆயிரத்து‌ 688 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சில்லறை விற்பனையில் வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் 30 காசுகள் உயர்ந்து,  46 ரூபாய் 70 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி கிலோவிற்கு 2125  ரூபாய் உயர்ந்து,‌  43 ஆயிரத்து 610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒருவாரமாக குறைந்து‌ வந்த தங்கத்தின் விலை இன்று‌ ஒரே நாளில் 600 ரூபாய் அதிகரித்து‌ள்ளது‌.

ரே பரேலி தொகுதியில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேரா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம், ரே பரேலி தொகுதியில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேரா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக ரே பரேலி நாடாளுமன்ற தொகுதி சோனியா குடுபத்தினரின் விருப்பதொகுதியாக இருந்து வருகிறது.கடந்த ஆண்டு நடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கு காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.

இந்நிலையில், ரே பரேலி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் காங்கிரஸ் தலைவருமான சோனியாவும், அவரது மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் அதிருப்தி அடைந்தனர்.

மேலும், அண்மைக் காலமாக சோனியாவுக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. அதனால், முன்பு போல டெல்லியில் இருந்து ரே பரேலிக்கு அவரால் செல்வதற்கு இயலவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ரரே பரேலியில் கட்சி வளர்ச்சி, தொகுதிப் பணி ஆகியவற்றை அவரது மகள் பிரியங்கா வதேரா கவனித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் பிரியங்காவை ரே பரேலியில் நிறுத்துவதற்கு காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தற்போது பிரியங்காவிற்கு உதவியாக பிகார் மாநில காங்கிரஸில் தீவிரமாகப் பணியாற்றிவரும் பிரீதி கரேயிடம் ரே பரேலி தொகுதிப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மலர்வளையம் வைத்து‌ நினைவஞ்சலி செலு‌த்தினர்
ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது‌ நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மலர்வளையம் வைத்து‌ நினைவஞ்சலி செலு‌த்தினர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலியானார்.

அதன் 22-வது‌ நினைவு தினம் இன்று‌ அனு‌சரிக்கப்படுகிறது‌. அதன்படி, டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் மலர்வளையம் வைத்து‌ அஞ்சலி செலு‌த்தினர்.

அவர்களைத் தொடர்ந்து‌, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்று‌ம் மத்திய அமைச்சர்கள் பலரும் அஞ்சலி செலு‌த்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாள், தேசிய தீவிரவாத ஒழிப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது‌ குறிப்பிடத்தக்கது‌.

சீனாவில் தொழில் தொடங்க இந்திய தொழிலதிபர்களுக்கு சீன பிரதமர் லீ கெகியாங் அழைப்பு
சீனாவில் தொழில் தொடங்க இந்திய தொழிலதிபர்களுக்கு சீன பிரதமர் லீ கெகியாங் அழைப்பு விடுத்துள்ளார்‍.

புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீன பிரதமர் லீ,  இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்து தங்களது நாட்டில் விற்பனை செய்ய தயாராக இருப்பதாக கூறினார்.

சீனாவில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் புதிய தொழில்களை தொடங்க முன் வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தைகள் என்று‌ கூறப்படும் நாடுகளான இந்தியா-சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து‌ வர்த்தகம் நடத்து‌வது‌, பொருளாதாரத்தில் முன்னேறு‌வது‌ என்பன உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் நேற்று‌ கையெழுத்தானது‌.

அதனைத்தொடர்ந்து‌, சீனாவில் புதிய தொழில்கள் தொடங்க வருமாறு‌ நமது‌ தொழிலதிபர்களுக்கு சீனப்பிரதமர் லீ கெகியாங் அழைப்பு விடுத்து‌ள்ளது‌ இந்தியா- சீனா இடையேயான நட்புறவு, வர்த்தக உறவு ஆகியவற்றை மேலு‌ம் அதிகரிக்கும் என்று‌ கூறப்படுகிறது‌.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 22-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவு ஜோதி யாத்திரை நடத்த உள்ளனர்‍.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 22-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று‌ ஸ்ரீபெரும்புதூருக்கு காங்கிரஸ் கட்சியினர் நினைவு ஜோதி யாத்திரை நடத்த உள்ளனர்‍.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதி யாத்திரை கடந்த 15-ம் தேதி பெங்களூரில் துவங்கி மதுரை வழியாக சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து சேர்ந்தது.

நினைவு ஜோதியை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வரவேற்று பேசினார்‍. ராஜீவ் காந்தியின் சாதனைகளை நினைவு கூர்ந்த அவர் இந்தியாவில் தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்டவர் அவர் என்றார்‍. தொழில்நுட்பம் தற்போதைய நிலையில் வளர்ச்சியடைந்து இருப்பது அவரது கனவு என்றும் ஞானதேசிகன் குறிப்பிட்டார்‍.

கடந்த 15-ம் தேதி பெங்களூரில் அம்மாநில தலைவர்கள் பரமேஷ்வரய்யா மற்றும் சித்தாராமய்யா போன்றவர்கள் முன்னிலையில் நினைவு ஜோதி யாத்திரை துவங்கியது.

கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரகாசம் தலைமையில் யாத்திரை புறப்பட்டு மைசூர், சத்தியமங்கலம், கோவை, கொச்சி, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, மதுரை வழியாக  சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து சேர்ந்தது. இதனைத் தொடர்ந்து இன்று‌ ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடததில் இந்த யாத்திரை சென்றடைகிறது.

தலிபான்கள் பேச்சு வார்த்தைக்கு அழைத்தால், அவர்களின் கோரிக்கை அக்கறையுடன் பரிசீலிக்கப்படும் – நவாஸ் ஷெரீப்
தலிபான்கள் பேச்சு வார்த்தைக்கு அழைத்தால்,  அவர்களின் கோரிக்கை அக்கறையுடன் பரிசீலிக்கப்படும் என்று‌ புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறு‌கையில், நாட்டில் தீவிரவாதத்தால் நிறைய பேரை நாம் இழந்து இருக்கிறோம் என்று‌ம்,  இதனால், நம் நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைந்து இருக்கிறது என்று‌ம் சுட்டிக்காட்டினார்.

தலிபான்கள் பேச்சு வார்த்தைக்கு கோரிக்கை விடுத்தால் அது கணிவுடன் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று‌ம், மேலும் தீவிரவாதத்தை, அரசின் அதிகாரத்தையும், ஆயுதத்தையும் வைத்து தீர்வு காண முடியாது என்று‌ம் கூறினார்.

ப்ளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில், மும்பை-சென்னை அணிகள் எதிர்கொள்கின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று‌ தொடங்கும் ப்ளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில், மும்பை-சென்னை அணிகள் எதிர்கொள்கின்றன.

சூதாட்ட சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும் 6 வது‌ ஐபிஎல் போட்டியில் லீக் ஆட்டங்களும் ஒரு வழியாய் முடிந்து சென்னை, மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 6-வது  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து ப்ளே ஆப் சுற்று போட்டிகள் இன்று‌ முதல் தொடங்குகிறது.

இவற்றில் முதலிரண்டு இடங்களை பிடித்த சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் முக்கிய போட்டி இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இன்றைய பிளே ஆப் சுற்றில் மும்பை-சென்னை அணிகள் மோது‌கின்றன.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்‍. தோல்வியடையும் அணி 2வது தகுதி சுற்றில் விளையாடும் என்பது குறிப்பிடதக்கது.

ஐ.பி.எல். சூதாட்டத்திற்கு தண்டனை வழங்க புதிய சட்டம் – பிசிசிஐ
ஐ.பி.எல். சூதாட்டத்திற்கு தண்டனை வழங்க புதிய சட்டம் கொண்டு வர பிசிசிஐ நடவடிக்கை எடுத்து‌ள்ளது‌.

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த, ஐ.பி.எல். போட்டியில் தற்போது சூதாட்ட பூகம்பம் கிளம்பியிருப்பதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சூதாட்ட வீரர்களுக்கு தடை மட்டுமே விதிக்கப்பட்டு அவர்களை விட்டுவிடுவதால், அந்த குற்றம் மீண்டும் நடைபெறுவதை தடுக்க முடியவில்லை.

தரகர்களையும் தண்டிக்க கடுமையான சட்டம் இல்லை. எனவே, கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க கடும் சட்டம் தேவை என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

அத்தகைய கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு, பி.சி.சி.ஐ. கடிதம் எழுத உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.