Home
You Are Here: Home » Cinema (Page 7)

விஸ்வரூபம் படத்தின் மீதான தடையை நீக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

விஸ்வரூபம் படத்தின் மீதான தடையை நீக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, படத்தை தமிழகத்தில் திரையிட மாநில அரசு தடை விதித்தது. தடைக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான விஸ்வரூபம் படத்தை பார்த்து ஆய்வு செய்தது. இதில், தய ...

Read more

ஆதிபகவன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு – இந்து அமைப்புகள் புகார்

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆதிபகவன் திரைப்படத்திற்கு எதிராக இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்துக் கடவுளை குறிக்கும் ஆதிபகவன் திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் அப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சில அமைப்புகள் புகார் அளித்துள்ளது ...

Read more

விஸ்வரூபம் படத்திற்கு மலேசியாவில் தடை – தமிழ் ரசிகர்கள் ஏமாற்றம்

இந்தியாவை தொடர்ந்து கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு மலேசியாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையிடப்பட்ட அடுத்த நாளே மலேசியா உள்துறை அமைச்ககம் படத்திற்கு தடை விதித்துள்ளது. இதனால்‌, அனைத்து தியேட்டர்களிலும் விஸ்வரூபம் படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மலேசியாவில் தமிழர்களும் அதிகம் வசிக்கின்றனர்‍. தமிழ் படங்களுக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால், தற்போது விஸ்வரூபம ...

Read more

கமலுக்கு இயக்குநர் பாரதிராஜா ஆ‌‌தரவு‌

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக இயக்குனர் பாரதி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரையுலகிற்கு ‌தம்மை அர்‌ப்பணித்து கொண்‌ட கமலை காயப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ‌விஸ்வரூபம் திரைப்ப‌டம் உலக தரத்தில் அமைந்துள்ளது என்பதையும் ‌பாரதிராஜா சுட்டிக்காட்டியுள்ளா‌ர். விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ...

Read more

விஸ்வரூபம் மேல்முறையீட்டு மனு தள்ளி வைத்தது சென்னை உயர்நீதி மன்றம்

கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை, பிப்ரவரி 3ந் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மர்மயோகி என்ற திரைப்படம் எடுக்க நடிகர் கமல்ஹாசனுக்கு 11 கோடி ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் படத்தை எடுக்காமலும, பணத்தை திருப்பிக் கொடுக்காமலும அவர் ஏமாற்றி வருவதால், விஸ்வரூபம் படத்தை வெளியிட தடைகோரி, ரீஜென் சாய் மீரா நிற ...

Read more

அஜித்குமார், ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் கூட்டணி – இரட்டை வேடத்தில் அஜித் நடிப்பதாக தகவல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் முருகதாஸ் கூறிய ஒன் லைன் கதை அஜித்திற்கு மிகவும் பிடித்தாக தெரிகிறது. இதனையடுத்து அந்த கதையில் நடிக்க அஜித் சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய திரைப்படத்திற்கு பின், முருகதாஸ் படத்தில் அஜித் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் முக்கியமாக ...

Read more

விஸ்வரூபம் ஜனவரி 25 ல் வெளியீடு – நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு

விஸ்வரூபம் திரைப்படம் ஜ‌னவரி 25-ம் தேதி வெளியிடப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தமிழகமெங்கும் 500 திரையறங்குகளில் வெளியிடப்படும் என்று கமல்‌ஹசான் தெரிவித்துள்ளார். ...

Read more

விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் முடிந்ததாக தகவல்

நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.சில் முதலில் வெளியிடுவது தொடர்பாக இருந்து வந்த விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இத்திரைப்படத்தை திரையரங்குகளில் முதலில் வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் ...

Read more

மத்திய அரசின் சேவை வரியை ரத்து செய்யக் கோரி, தமிழ்திரைப்பட நடிகர் நடிகைகள் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் இன்று சென்னையில் உண்ணாவிரதம்

மத்திய அரசின் சேவை வரியை ரத்து செய்யக் கோரி, தமிழ்திரைப்பட நடிகர் நடிகைகள் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் இன்று சென்னையில் உண்ணாவிரதம் இருக்கவுள்ளனர். மத்திய அரசு ஆண்டுக்கு பத்து லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறும் திரைப்பட கலைஞர்களுக்கு 13 புள்ளி 6 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இதை கண்டித்து இன்று திரையுலகின் அனைத்து அமைப்பினை சேர்ந்தவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் சின்னத ...

Read more

நடிகை பிபாஷாபாசு உடற்பயிற்சி டி.வி.டி.யை வெளியிட்டார்

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, நடனத்துடன் உடற்பயிற்சி மேற்கொள்ளும் டிவிடி மும்பையில் வெளியிடப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, உடற்பயிற்சியின் முக்கியத்துவம் கருதி, 30 நிமிடம் நடனத்துடன் கூடிய உடற்பயிற்சி அடங்கிய டி.வி.டி.யை மும்பையில் வெளியிட்டார்‍. பிரபல தொழிலதிபர்கள் மற்றும் பாலிவுட் சினிமா பிரபலங்கள் முன் இந்த டி.வி.டி.யை அவர் வெளியி்ட்டார்‍. டி.வி.டி.யை வெளியிட்ட பிறகு பேசிய அவர்‍, உடற்பயிற்சி க ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top