Home
You Are Here: Home » Cinema (Page 5)

சமந்தாவை தாம் திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல் – நடிகர் சித்தார்த் மறுப்பு

நடிகை சமந்தாவை தாம் திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல்களுக்கு நடிகர் சித்தார்த் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழில் பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த்தும், நடிகை சமந்தாவும் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்படும் ஜோடியாக உள்ளனர்.‌ இந்நிலையில், சித்தார்த் மற்றும் சமந்தா ஆகிய இருவரும், அவர்களின் குடும்பமும் காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து, புதிதாக திருமணமானவர்கள் நடத் ...

Read more

ஐ திரைப்படம் 1‌00 கோடி ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாகிறது

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐ திரைப்படம் 1‌00 கோடி ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாகி வருவதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார். பிரம்மாண்டப் படங்களை தருவதில் வல்லவரான இயக்குனர் ஷங்கர், எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, ஐ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் , இந்தப் படத்தின் பட்ஜெட் 150 கோடி எனவும், சீனாவைப் போல கொடைக்கானலில் அரங்குகள் அமைக்கப்பட்டு ...

Read more

நகைக்சுவை நடிகர் கவுண்டமணி தமது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார்.

தமிழ் திரை உலகில் என்.எஸ்.கிருஷ்ணனில் தொடங்கி இன்றைய சந்தானம் வரை எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் வந்துள்ளனர். ஒருவரை சிரிக்க‌வைக்கும் கலையில் தனித்துவமான பாணியை கடைபிடித்தால் மட்டுமே ரசிகனால் நீண்ட காலம் பேசப்பட முடியும். இதில் நகைச்சுவைக்கு மிக முக்கிய பங்கு உண்டு‌. அந்த வகையில் தமிழ் நகைச்சுவை நடிகர்களில் கவுண்டமணிக்கென்று தனி‌ இடமுண்டு. ஒருகாலகட்டத்தில் கவுண்டமணி இருந்தால் படம் நிச்சய வெற்றி என்ற நிலை இருந ...

Read more

கவுதம் மேனன் தமக்கு 20 கோடி ரூபாய் தரவேண்டும் – எல்ரெட் குமார்

இயக்குனர் கவுதம் மேனன் தமக்கு 20 கோடி ரூபாய் தரவேண்டும் என்று தயாரிப்பாளரும் அவரது முன்னாள் பங்குதாரருமான எல்ரெட் குமார் பரபரப்பான புகாரை தெரிவித்துள்ளார். கோ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரான எல்ரெட் குமாரும், இயக்குனர் கெளதம் மேனனும் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் கூட்டணியில் கடைசியாக தயாரித்து வெளியிடப்பட்ட நான்கு படங்கள், பெரும் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ஏற்பட்ட ...

Read more

5 தேசிய விருதுகள் தமிழ் படவுலகிற்கு கிடைத்துள்ளன

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18 படத்திற்கு சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 5 தேசிய விருதுகள் தமிழ் படவுலகிற்கு கிடைத்துள்ளன. 2013 ஆம் ஆண்டிற்கான 60 வது தேசிய விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படத்திற்கான விருதை இந்தி மொழியில் வெளியான பான் சிங் தோமர் திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது இரண்டு பேருக்கு கிடைத ...

Read more

விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்தில் இடம்பெறாத காட்சிகளை இரண்டாம் பாகத்தில் பயன்படுத்தி உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்தில் இடம்பெறாத காட்சிகளை இரண்டாம் பாகத்தில் பயன்படுத்தி உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். காதல், தாய், மகன் பாசம், போர்க்களக் காட்சிகளை இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுக்கான ஆயத்த வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளதாகவும் தெரி ...

Read more

தயாநிதி அழகிரி தயாரித்த படம், உதயநிதி ஸ்டாலின் வெளியீடு

மு‌.க.அழகிரியின் மகன் தயாநிதி‌‌ அழகிரி தயாரித்த உதயம் என்.எச்.14 என்ற திரைப்படத்தின் விநியோக உரிமையை மு.க.ஸ்டாலினின் மகன் உத‌யநிதி பெற்றுள்ளார். கிளைவுட் நைன் மூவிஸ் என்ற பெயரில் ‌தயாநிதி அழகிரி படத்தயாரிப்பு நிறுவனத்தை‌ நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் அஜித் ‌நடித்த மங்காத்தா உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தார். இந்நிலையில் புதுமுக இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில், உதயம் என்.எச்.14 என்ற படத்தை ...

Read more

பீட்சா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வில்லா என்ற பெயரில் தயாராகிறது.

குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வசூலையும், விருதுகளையும் குவித்த திகில் கதையம்சத்துடன் வெளியான பீட்சா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வில்லா என்ற பெயரில் தயாராகிறது. அட்டக்கத்தி, பீட்சா ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம், பீட்சா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 2ஆம் பாகத்தில், இயக்குனர் மற்றும் நடிகர், நடிகைகள் என அனைத்திலும் மாற்றம் செய் ...

Read more

நரேன், கார்த்தி காமெடியில் கலக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா

அஞ்சாதே, முகமூடி படங்களின் மூலம் கவனம் ஈர்த்த குணச்சித்திர நடிகரான நரேன், கார்த்தி காமெடியில் கலக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும் கூட்டு சேர்கிறார். கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் பிரபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், அஞ்சாதே, முகமூடி, சுந்தர பாண்டியன் ஆகிய படங்களில் கவனம் ஈர்த்த குணச்சித்திர நடிகரான நரேனும், அவ ...

Read more

தமிழ் திரைப்பட உலகில் பழம் பெரும் நடிகையான ராஜசுலோசனா இன்று சென்னை மடிப்பாக்கத்தில் காலமானார்

தமிழ் திரைப்பட உலகில் பழம் பெரும் நடிகையான ராஜசுலோசனா இன்று சென்னை மடிப்பாக்கத்தில் காலமானார். அவருக்கு வயது 77. தமிழகத்தின் பெருமைமிக்க கலைஞர்களான மறைந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன், தெலுங்கில் என்டிஆர், கன்னடத்தில் ராஜ்குமார் என சாதனையாளர்களுடன் நடித்தவர் ராஜசுலோசனா. 1935-ம் ஆண்டு, அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த பெஜவாடாவில் பிறந்தவர் ராஜசுலோசனா. 1953-ல் அவர் நடித்த முதல் படம் குணசாகரி வெளியானது. தொடர் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top