Home
You Are Here: Home » News » Andhra Pradesh (Page 4)

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெலுங்கானா மசோதா கண்டிப்பாக நிறைவேற்றப்படும் – மத்தியஅரசு

ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் தெலுங்கானாவிற்கு ஆதரவான தீர்மானம் தோல்வியடைந்தாலும், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெலுங்கானா மசோதா கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது. ஆந்திர மாநில சட்டமன்றத்தில் விவாதி்த்து முடிவு செய்யுமாறு குடியரசுத்தலைவர் அனுப்பி வைத்த மத்திய அரசின் தெலுங்கானா தனி மாநில மசோதாவை ஆந்திர சட்டப்பேரவை நிராகரித்தது. இதையடுத்து இந்த மசோதா நிறைவேறுவதில் சி்க்கல் எழலாம ...

Read more

ஆந்திர பேரவையில் தெலுங்கானா மசோதா நிராகரிப்பு

தெலுங்கானா மசோதாவை நிராகரிக்கக் கோரி முதல்வர் கிரண்குமார் ரெட்டி கொண்டு வந்த தீர்மானம் ஆந்திர பேரவையில், குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது. தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்காக ஆந்திரா மறு சீரமைப்பு மசோதாவை ஆந்திர பேரவையின் ஒப்புதலுக்காக, ஜனாதிபதி கடந்த மாதம் 12ம் தேதி அனுப்பி வைத்தார். இந்த மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் கடந்த மாதம் 16ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு தெலங்கா ...

Read more

தனித்தெலுங்கான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர சட்டசபையில் கடும் அமளி

தனித்தெலுங்கான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இரண்டாவது நாளாக ஆந்திர சட்டசபையில் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆந்திராவை பிரித்து தனி தெலங்கானா மாநில அமைக்க மத்திய அனுமதி வழங்கியதுடன் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் தனி தெலுங்கான மசோதாவுக்கு குடியரசு தலைவர் பிரணாபு முகர்ஜி ஒப்புதல் அளித்ததை அடுத்த அந்த மசோதா ஆந்திர சட்டசபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை ...

Read more

பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் நாகேஸ்வரராவ் மரணம்

பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் நாகேஸ்வரராவ் உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் காலமானார். தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகநாக வலம் வந்தவர் நாகேஸ்வரராவ். 1940-ஆம் ஆண்டு தர்மபத்தினி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர்‌, தெலுங்கு, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்‌. தேவதாஸ் என்கிற படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ...

Read more

மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் – காங்கிரஸ்

வரும் மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என காங்கிரஸ் உறுதியுடன் கூறியுள்ளது.. குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த தனி தெலுங்கானா மசோதாவை ஆந்திர சட்டமன்றத்தில் நிறைவேற்ற ஒருமித்த கருத்து ஏற்படாததால் ஒததி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஒருங்கினைந்த ஆந்திராவை வலியுறுத்தி ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, டில்லியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு கொடுத்தார். அப்ப ...

Read more

ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினிமா செய்ய முடிவு

புத்தாண்டுதினத்தன்று ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி 175 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினிமா செய்ய முடிவு செய்துள்ளனர். தனித் தெலுங்கானா உருவாக்கப்படும் என்ற காங்கிரசின் அறிவிப்பு அம்மாநில மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அம்மாநில முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி உள்பட பல்வேறு அரசியல்கள் தலைவர்கள் குரல்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், வரும் புத்தாண்டு தினத்தையொட்டி ஆந்திரா மற்றும் ராய ...

Read more

கழுதைப்பால் ஒரு லிட்டர் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனை

மருத்து‌வ குணங்கள் நிறைந்த கழுதைப்பால் ஆந்திராவில் ஒரு லிட்டர் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது‌. கழுதைப்பாலில் ஏராளமான மருத்து‌வ குணங்கள் உள்ளன. அதற்கு சான்றாக எகிப்து‌ அரசி கிளியோபாட்ராவை கூறலாம். ஏனெனில், கிளியோபாட்ரா, கழுதைப்பாலில் குளித்ததால்தான், அவர் உலகமே வியக்கக்கூடிய பேரழகை அடைந்ததாக வரலாறு‌ கூறு‌கிறது‌. இந்நிலையில், ஆந்திராவில் ஒரு குடும்பத்தினர், கழுதைப்பாலை கறந்து‌, விற்பனை செய் ...

Read more

ஆந்திரா ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ரயில்வே முடிவு

ஆந்திராவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயங்கள் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று‌ ரயில்வே அறிவித்துள்ளது‌. ஆந்திர பிரதேசத்தில் இருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் தான் இவ்வி ...

Read more

தனி மாநிலம் அமைப்பதற்கான வரைவு மசோதா மீது ஆந்திர மாநில சட்டப்பேரவையில் இன்று விவாதம்

தெலுங்கனா தனி மாநிலம் அமைப்பதற்கான வரைவு மசோதா மீது ஆந்திர மாநில சட்டப்பேரவையில் இன்று விவாதம் தொடங்க உள்ளது. ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனித் தெலங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அதேவேளையில் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி சீமாந்திரா பகுதியினரும் போராடி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவையில் கடும் அமளிக்கிடையே தனித் தெலங்கானா தொடர்பான மசோதாவை பேரவைத் தலைவர் என்.மனோகர் ந ...

Read more

தெலுங்கானா குறித்த மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது

தெலுங்கானா மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர பகுதி எம்.எல்.ஏ.க்கள், தெலுங்கானா பகுதி எம்.எல்.ஏ.க்களுடன் மோதலில் ஈடுபட்டதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தின் 10 மாநிலங்களைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா குறித்த மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top