Home
You Are Here: Home » News » Andhra Pradesh (Page 3)

ஆந்திராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி

ஆந்திரா முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்துள்ளதால், அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது‌. இதனிடையே, காங்கிரஸ் கட்சியுடன் தெலு‌ங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை இணைக்கும் எண்ணம் இல்லை என்று‌ தெரிகிறது‌. தெலுங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்த மாநில முதலமைச்சராக இருந்த கிரண்குமார் ரெட்டி, பதவி விலகினார். இதனால் ஆந்திராவில் குடி ...

Read more

புதிய கட்சி தொடங்குவது குறித்து தீவிர ஆலோசனை – கிரண்குமார் ரெட்டி

ஆந்திர மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசில் இருந்து விலகிய கிரண்குமார் ரெட்டி, புதிய கட்சி தொடங்குவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலு்ம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஆந்திர மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆந்திராவில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதா? அல்லது தெலங்கானாவுக் ...

Read more

ஆந்திராவை இரண்டாக பிரித்த சோனியா காந்தி ஒரு சர்வாதிகாரி – ஜெகன்மோகன்

17 எம்.பிக்களை பெறலாம் என்ற தேர்தல் ஆதாயத்து்காகவே, ஆந்திராவை இரண்டாக பிரித்து சோனியா காந்தி சர்வாதிகாரி போல நடந்துகொண்டுள்ளார் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆந்திர மாநிலத்தை பிரிக்கக்கூடாது என்றும் ஒன்றிணைந்த ஆந்திராவே நீடிக்கவேண்டு்ம் எனவும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். எனினும் ஐக ...

Read more

கிரண்குமார் ரெட்டி பதவியை ராஜினாமா செய்ய முடிவு

தனித்தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி தமது பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில்‌, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி, தனித்தெலுங்கானா மசோதாவை ஆந்திரா சட்டசபையில் நிராகரித்து திருப்பி அனுப்பினார். ஆனால்‌, மக்களவையில் தனித்தெலுங் ...

Read more

சீமாந்திராவில் இன்று முழு அடைப்பு

தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வகை செய்யும் மசோதா, மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனால்‌, மகிழ்ச்சி அடைந்துள்ள தெலுங்கானா மக்கள் ஆரவாரம் செய்து கொண்டாடி வருகின்றனர். அதே சமயம்‌, ராய ...

Read more

டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் – ஜெகன்மோகன் ரெட்டி

தனித் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தெலுங்கானா மசோதாவை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால், தெலுங்கானா ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தனிமாநில ஆதரவாளரான தெலுங்கானா ராஷ்டிர ...

Read more

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு – கிரண்குமார் ரெட்டி

தனி தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி தமது பதவியை ராஜினிமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலங்கானா விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டியை சீமாந்திரா பகுதியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் நாளை சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின் போது, தெலு‌ங்கானா விவாகரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் ...

Read more

தெலுங்கானா பிரச்சனையில் பாஜக இரட்டை வேடம் – நாராயணசாமி

தெலுங்கானா பிரச்சனையில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்தவிடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதும், மிளகு திராவகம் வீசுவதும் கடும் கண்டனத்துக்குரியது என்று கூறினார். இதுபோன்ற செயல் முறையற்றது என்றும் அவர் தெரிவித்தார். கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் ...

Read more

தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவுக்கு நேற்று‌ குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து‌ இன்று‌ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று‌ எதிர்பார்க்கப்படுகிறது‌, தனித்தெலுங்கானா மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க மறுத்து ஆந்திரா சட்டசபை அந்த மசோதா குடியரசு தலைவருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இருப்பினும்‌, தனித்தெலுங்கானாவை அமைக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற ...

Read more

தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு – அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

ஆந்திராவில் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் 12-ந் தேதி வரை வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர். நான்கரை லட்சம் பேர் இதில் பங்கேற்கின்றனர். ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக வகை செய்யும் தீர்மானம் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர கடலோர மற்றும் ராயலசீமா பகுதியை சேர்ந் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top