Home
You Are Here: Home » News » Andhra Pradesh (Page 2)

தெலுங்கானாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

தெலுங்கானா பகுதிக்கு சொந்தமான 7 பகுதிகளை, சீமாந்திரா பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி கட்சி சார்பில் இன்று முழுயடைப்பு போராட்டம் நடைபெறுகிறது போலாவரம் பல்நோக்கு நீர்ப்பாசனத் திட்டம் காரணமாக, கம்மம் மாவட்டத்தின் 7 தாலுகாக்களில் உள்ள கிராமங்களை சீமாந்திரத்தில் இணைக்க மத்திய அரசு முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தெலுங்கானா ர ...

Read more

சீமாந்திராவில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார் – கோடிக்கணக்கான ரூபாய் பந்தயம்

புதிதாக உருவாக உள்ள சீமாந்திராவில் முதன்முதலில் ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார் என்பது குறித்து தற்போது கோடிக்கணக்கான ரூபாய் அளவில் பந்தயம் நடைபெற்று‌ வருகிறது‌. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் வரும் ஜூன் 2-ம் தேதி இரண்டாகப் பிரிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் நாட்டின் 29-வது மாநிலமாக தெலு‌ங்கானா உதயமாகிறது. இதனால் கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகியவை சீமாந்திரா அல்லது ஆந்திரப் பிரதேசம் என அழைக்கப்பட உள்ளது. தெலு‌ங்கானா ...

Read more

மக்களவை தேர்தலுக்கான 8-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது

மக்களவை தேர்தலையொட்டி ஆந்திரா மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 64 தொகுதிகளுக்கும், சீமாந்திராவின் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை 8-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவைக்கு 543 உறுப்பினர்களை தேர்தெடுப்பதற்காக 9 கட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இதுவரை ஏழு கட்டங்களாக 437 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. 8-வது கட்டமாக ஏழு மாநிலங்களில் பரவியுள்ள 64 தொகுதிகளில் நாளை வாக்குப்ப ...

Read more

குண்டுவெ‌டிப்பில் உயிரிழந்த இளம்பெண் சுவாதியின் இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெ‌டிப்பில் உயிரிழந்த இளம்பெண் சுவாதியின் இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை சக்திவாய்ந்த இரட்டை குண்டுகள் வெடித்ததில், ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த 22-வயதான சுவாதி என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, உயிரிழந்த இளம்பெண் சுவாதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது பெற்றோரி ...

Read more

ஆந்திர சட்டப்பேரவையை கலைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை

ஆந்திர சட்டப்பேரவையை கலைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால், இரண்டு மாதங்களில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்று விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தேர்தல் நடைபெற்று வருவதால், நாடாளுமன ...

Read more

சந்திரசேகர் ராவ் கட்சியுடன் கூட்டணி – ராகுல் காந்தி ஆலோசனை

சந்திரசேகர் ராவ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து, தெலுங்கானா பிராந்திய காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவானதை தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் அந்த மாநிலத்தின் இரு பிராந்தியங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு உள்ளது. மாநிலத்தை பிரித்ததால் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக சீமாந்திரா பிராந்தியத்தில் ஒரு ...

Read more

ஜெகன்மோகன்ரெட்டியின் சொத்துக்கள் முடக்கம்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன்ரெட்டியின் 863 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆந்திராவில் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன்ரெட்டியின் 863 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்‍. ஜெகன்மோகன்ரெட்டியின் தந்தையும் முன்னாள் முதல் அமைச்சருமான ராஜசேகரரெட்டி பதவியில் இருந்தபோது ...

Read more

தனி தெலுங்கானா மாநிலம் ஜூன் 2-ஆம் தேதி உதயம்

நாட்டின் 29-வது புதிய மாநிலமாக தனி தெலுங்கானா மாநிலம், ஜூன் 2-ஆம் தேதி உதயமாகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரபூர்வ அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஜூன் 2ஆம் தேதி தெலுங்கானா தனி மாநிலம் உதயமாகும் என்றும், அன்றைய தினம் முதல் தெலுங்கானா தனி மாநிலமாகவே செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவித்தார். தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு நாடாளுமன்றம் கடந்த ...

Read more

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி காங்கிரசுடன் இணைய முடிவு

காங்கிரசுடன் இணைவது குறித்து சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி இன்று இறுதி முடிவு எடுக்கிறது. தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியதை தொடர்ந்து, சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தினருடன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நன்றி தெரிவித்தார். தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் சம்மதித்தால் அந்த கட்சியுடன் தெலுங்கானா ராஷ் ...

Read more

ஆந்திர மாநில புதிய முதலமைச்சர் யார்? – இன்று முடிவு

ஆந்திர மாநில புதிய முதலமைச்சர் யார்? என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடம் இன்று முடிவு செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களாக முகாமிட்டிருந்த தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி தலைவர் சந்திரசேகரராவ் சோனியா மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்த பின் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தி்த்து பேசினார். இந்நிலையி்ல் சீமாந்திரா தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் மேலி்ட தலைவர்கள் கூட்டம் ந ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top