Home
You Are Here: Home » News » Kerala (Page 4)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை இன்று நடைபெறுகிறது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை இன்று நடைபெறுகிறது. மகரஜோதியை தரிசிப்பதற்காக சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த மாதம் 26ம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. இதன்பிறகு மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை, கடந்த மாதம் 30ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் மகரவிளக்கு பூஜை இன்று மாலை நடைபெறுகி ...

Read more

அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கேரளாவில் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக ஆசிரியர்கள் மற்றும் பேருந்து ஊழியர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளதால் திருவனந்தபுரத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. பள்ளிகளிலும் குறைவான ஆசிரியர்களே வந்திருந்தனர். கன்னியாகுமரி மாவட ...

Read more

கொச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை துவக்கி வைக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்

கேரள மாநிலம் கொச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை துவக்கி வைக்க பிரதமர் மன்மோகன் சிங் இன்று கேரளா செல்ல உள்ளதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு 'பிரவாசி பாரதீய திவாஸ்' என்ற பெயரில் 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாடு வளைகுடா நாடுகளில் வாழ்கிற இந்தியர்கள் தொடர்பான கருத்தரங்குடன் இன்று தொடங்குகிறது. இருப்பினும், அதிகாரபூர்வமாக பிரதமர் மன்மோகன் சி ...

Read more

நித்தியானந்தா மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு

நித்தியானந்தா மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை காவல்துறை ஏற்கவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டு வேல். நித்தியானந்தாவின் பக்தராய் இருந்த இவர், அவரது‌ அறிவுரைப்படி, தியான வகுப்புகளை துவக்கியிருக்கிறார். இதற்காக நித்தியானந்தாவிடமிருந்து முன் பணமாக இரண்டரை லட்சம் ரூபாயை பெற்றதாக சொல்லும் செங்கோட்டுவேல்‌, ஜ ...

Read more

முல்லை பெரியாறு அணை 3ம் கட்டபராமரிப்பு

முல்லை பெரியாறு அணை கேலரி பகுதியில் கசிவுநீர் வெளியேறும் துளைகளில் படிமான அடைப்பு நீக்கும் 3ஆம் கட்ட பராமரிப்பு பணிகள் தொடங்கின. முல்லை பெரியாறு அணை குறித்து தமிழக -கேரள அரசுகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கிய போது அணை பலமாக உள்ளது என்றும் அணையின் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் போது மத்திய நீர்வள ஆணைய பொறியாளர் மற்றும் தமிழக -கேரள நீர்வள பொறியாளர்களின் மேற்பார்வையில் பணிகள ...

Read more

மண்டல பூஜையின் நிறைவு விழா

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நிறைவு பெறுவதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் 41 நாள் மண்டல பூஜை வழிபாடு பிரபலமானது. இந்த பூஜை வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில், நவம்பர் 16-ம் தேதி தாமோதரன் நம்பூதிரி, 18 படி நடைதிறந்து, ஆலயப் பிரகாரம் சுற்றிவந்து ஐயப்பன் சன்னிதியைத் திறந்து ...

Read more

கேரள மாநிலம் குமுளி அருகே விமான நிலையம்

கேரள மாநிலம் குமுளி அருகே விமான நிலையம் அமைக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், அதனை ஒட்டி உள்ள தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் குமுளியை அடுதத அணைக்கரை என்ற இடத்தில், விமான நிலையம் அமைக்க விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, 1000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு விமான நிலையம் வருவதால், கேரளாவ ...

Read more

மாலுமிகளை இத்தாலிக்கு அனுப்ப மீனவர்கள் எதிர்ப்பு

மீனவர்களை சுட்டுக்கொலை செய்த இத்தாலிய மாலுமிகளை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அனுப்பக் கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது. கேரளா மீனவர்கள் சுடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாலுமிகளை, கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாட்டத்திற்கு அனுப்ப வேண்டும் என இத்தாலி அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் விரைவான தீர்ப்பு வழங்கப்படவில்லை என இத்தாலி தனது ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top