Home
You Are Here: Home » News » Kerala (Page 3)

முல்லைப்பெரியாறு‌ அணை தமிழகத்திற்கு சொந்தமானது‌தான் கேரளா அரசு ஒப்புதல்

முல்லைப்பெரியாறு‌ அணை தமிழகத்திற்கு சொந்தமானது‌தான் என்று‌ உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு ஒப்புதல் தெரிவித்து‌ள்ளது‌. முல்லைப்பெரியாறு‌ குறித்த இறு‌திக்கட்ட விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று‌ வருகிறது‌. அதன் வாதம் இன்று‌ம் நடைபெற்றது‌. கேரள அரசு சார்பில் அந்த மாநில வழக்கறிஞர் இன்று‌ தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து‌ரைத்தார். அப்போது‌, முல்லைப்பெரியாறு‌ அணை தமிழகத்திற்கு சொந்தமானது‌தான் என்று கூறினார். ஆ ...

Read more

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக கேரள அரசுகள் இறுதி கட்ட விசாரணை

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக கேரள அரசுகள் இடையேயான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் நடத்த உள்ளது. , முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துள்ளதாகவும் அந்த அணைககு பதிலாக அப்பகுதியில் உள்ள மலைப் பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது. புதிய அணைக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திட ...

Read more

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த, 24 மணி நேரத்தில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த, 24 மணி நேரத்தில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்' என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென் மேற்கு பருவமழை, கடந்த, 1ம் தேதி தொடங்கியது. இதனால் தமிழகம், கேரளா, கடலோர கர்நாடகா, மற்றும் கடலோர ஆந்திராவில், நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று 2ம் நாளாக, ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக, காரைக்காலில், 8 சென்டிம ...

Read more

சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது

வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்பட உள்ளன. ஐய்யப்பன் கோவில் திருநடையை, மேல்சாந்தி தாமோதரன் திறந்து குத்துவிளக்கு ஏற்றவிருக்கிறார். அதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற உள்ளன. நடை திறப்பதையொட்டி, நாளை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது எனவும், கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வரும் 15-ம் தேதி முத ...

Read more

பாஜகவினர் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

நிலக்கரி சுரங்க ஊழலை கண்டித்தும் பிரதமர் பதவி விலக வலியுறுத்தியும் பாஜக சார்பில் இன்று நாடு தழுவிய அளிவில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சுரங்க ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமரும், சிபிஐ அறிக்கையை திருத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரும் பதவி விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கோரிக்கையை இருவரும் நிராகரித்து விட்டனர். இதையடுத்து நிலக்கரி சுரங்க ஊழலை கண்டித்தும், பிரதமர் பதவி விலக கோரியும் மாநி ...

Read more

முல்லைப்பெரியாறு வழக்கு விசாரணை ஜுலை 23 ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

முல்லைப்பெரியாறு அணை குறித்த இறுதி கட்ட வழக்கு விசாரணையை ஜுலை 23 ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136அடியிலிருந்து 142அடியாக உயர்த்த தமிழக அரசு கோரியது. இதற்கு மறுப்பு தெரிவித்த கேரள அரசு, அணை வலுவிழந்து இருப்பதால் புதிய அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியது. இது தொடர்பாக இரு மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இது குறித் ...

Read more

மனைவியை தாக்கியதாக புகார் எழுந்ததையடுத்து, கேரளா அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கேரள வனத்துறை அமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கணேஷ்குமாருக்கும், அவரது மனைவி யாமினிக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. தனது கணவர் தன்னை கடந்த 14 ஆண்டுகளாக அடித்து துன்புறுத்தி வருவதாக யாமினி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து எழுந்த சர்ச்சையால் அமைச்சர் கணேஷ்குமார் நேற்று இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியை அவர் நேரில் சந்தித்து வழ ...

Read more

மாநிலங்களவை துணைத்தலைவர் பி.ஜே.குரியனை புறக்கணிக்க இடதுசாரி கட்சிகள் முடிவு

சூரியநெல்லி வழக்கில் சிக்கிய மாநிலங்களவை துணைத்தலைவர் பி.ஜே.குரியனை புறக்கணிக்க இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன. கேரளாவில் சூரியநெல்லி என்ற இடத்தில் 13வயது பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த பாலியல் சம்பவத்தில் மாநிலங்களவை துணைத்தலைவர் பிஜே குரியனுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. எனினும் போதிய சாட்சியம் இல்லாதால் பிஜேகுரியன் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தர்மரா ...

Read more

சபரிமலை மகரவிளக்கு திருவிழா வருமானம் 170 கோடி

சபரிமலை கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜை காலத்தில் மட்டும் 170 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மகர விளக்கு பூஜை காலத்தில் கோயிலுக்கு கிடைத்த வருமானம், 168 கோடியாக இருந்தது. இது, இந்த ஆண்டு 170 கோடியாக அதிகரித்துள்ளது. மண்டல மகர விளக்கு பூஜை காலங்களில் பிரசாதங்களின் விலை, பூஜை கட்டணங்கள், தங்கும் விடுதிகள் வாடகை கட்டணம் போன்றவை எதுவும் உயர்த்தப்படாத நிலையில்‍ இந்த வருமானம் கிடைத்துள்ளது. ச ...

Read more

பொன்னம்பலமேட்டில் பிரகாசித்த மகரஜோதி – பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்களின் சரண கோஷத்திற்கு இடையே பொன்னம்பல மேட்டில் பிரகாசித்த மகர ஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் முக்கிய நிகழ்ச்சியான மகர விளக்கு பூஜை நடைபெற்றது. பந்தளம் சாஸ்தா கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து சில நிமிடங்களில் பொன ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top