Home
You Are Here: Home » News » Kerala (Page 2)

கேரளாவில் இருந்து ‌பெங்களூருக்கு தமிழகம் வழியாக எரிவாயு குழாய் பதிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

கேரளாவில் இருந்து ‌பெங்களூருக்கு தமிழகம் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் நிறு‌வனத்தின் திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து‌ள்ளது‌. மத்திய அரசின் எண்ணெய் நிறு‌வனமான கெயில் நிறு‌வனம் கேரளாவில் இருந்து‌ பெங்களுருக்கு, எண்ணெய் குழாய் பதிக்க திட்டமிட்டது‌. இதையடுத்து‌, கோவை, ஈரோடு, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதிக்க கெயில் நிறு‌வனம் குழிதோண்டியது‌ ...

Read more

சித்தி மற்றும் தந்தையால் சித்ரவதை செய்யப்பட்ட குழந்தை வேலூர் மருத்துவமனையில் சிகிக்சை முடிந்து சொந்த ஊர் திரும்பியது

சித்தி மற்றும் தந்தையால் சித்ரவதைக்கு ஆளாகு பாதிக்கப்பட்ட 5 வயது குழந்தை வேலூர் மருத்துவமனையில சிகிக்சை பெற்று உடல் தேரிய நிலையில் சொந்த ஊர் திரும்பியது. கேரள மாநிலம் குமுளி பகுதியை சேர்ந்தவர் ரபீக். இவர் தனது இரண்டாவது மனைவியின் பேச்சை கேட்டு, தனது முதல் மனைவி மூலம் பிறந்த 5 வயது குழந்தையான சபீக்கை மிக கொடூரமான முறையில் துன்புறுத்தினார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்த ...

Read more

சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் குறித்து‌ புதிய மேல்சாந்தி அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்

சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் குறித்து‌ புதிய மேல்சாந்தி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கோவில் நடைதிறக்கப்பட்டு அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது. தற்போது சபரிமலையில் மிதமான காலசூழ்நிலை நிலவுவதால் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார் ...

Read more

கேரள மாநில த்தில் 2-வது நாளாக முழு அடைப்புப் போராட்டம் பொது‌மக்கள் மற்று‌ம் ஐயப்ப பக்தர்கள் அவதி

கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 2-வது நாளாக முழு அடைப்புப் போராட்டம் தொடர்கிறது. இதனால், பொது‌மக்கள் மற்று‌ம் ஐயப்ப பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின்படி, மத்திய வனத்துறை மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சகம் மேற்கு தொடர்ச்சி மலையை மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், ...

Read more

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழு கடை அடைப்பு போராட்டம்

வனப்பாதுகாப்பு தொடர்பான கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் கடையடைப்பைத் தொடர்ந்து, வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோ, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் அனைத ...

Read more

சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை நாளை மாலை 5.30 மணிக்கு திறப்பு

மண்டலபூஜை திருவிழாவுக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை நாளை மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மண்டல பூஜை தொடங்கி 41 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டின் மண்டல காலம், வரும் 16-ந் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் திருநடை நாளை மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னி ...

Read more

மகரவிளக்கு பூஜை திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் 15-ம் தேதி திறக்கப்படுகிறது

மண்டல- மகரவிளக்கு பூஜை திருவிழாவை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, வரும் 15-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜை அடுத்த மாதம் டிசம்பர் 26 ம் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் ந்தேதியும் நடைபெறுகிறது. இதற்காக, வருகிற 15ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு மு ...

Read more

கேரள காங்கிரஸ் எம்பி மீது‌ கொடுத்த பாலியல் புகார் நடிகை ஸ்வேதா மேனன் வாபஸ்

கேரள காங்கிரஸ் எம்பி மீது‌ கொடுத்த பாலியல் புகாரை நடிகை ஸ்வேதா மேனன் நேற்று இரவு வாபஸ் பெற்றுக்கொண்டார். காங்கிரஸ் எம்.பி. தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்ததையடுத்து அவர் தனது வழக்கை வாபஸ் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. பிரபல மலையாள நடிகை சுவேதா மேனன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொல்லம் பகுதியில் நடந்த படகுப் போட்டிக்குச் சென்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காங ...

Read more

சுவேதா மேனனு‌க்கு பாலியல் தொல்லை என வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌

கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மலையாள நடிகை சுவேதா மேனனு‌க்கு, காங்கிரஸ் எம்.பி. ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ளதாக வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌. காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குரூப் என்பவர்தான், நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்தவராவார். கேரள மாநிலம் கொல்லம் ‌பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை, மேடையில் நின்று‌கொண்டிருந்தார். அப்போது‌, நடிகையின் அருகே ...

Read more

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நாளை மாலை திறக்கப்படுகிறது.

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நாளை மாலை திறக்கப்படுகிறது. புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top