Home
You Are Here: Home » News » Karnataka (Page 9)

கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்படவில்லை – ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

கர்நாடக மாநில பாரதிய ஜனதா அரசுக்கு எவ்வித சிக்கலும் இல்லை என்று அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ராஜ்நாத் சிங்கை கர்நாடக முதல் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், கர்நாடக மாநில பாரதிய ஜனதா அரசுக்கு முழுப் பெரும்பான்மை உள்ளதாக கூறியுள்ள ...

Read more

எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கோரிக்கை

கர்நாடக அரசுக்கு நெருக்கடி அளித்து வரும் எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 13 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சபாநாயகர் போப்பையாவை வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையுடன் சபாநாயகரை சந்தித்த பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏக்கள் தற்போது கர்நாடக ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் கர்நாடக ஜனதா கட்சியின் கூட்டங்களில ...

Read more

காவிரியில் நதிநீர் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இன்று‌ விசாரணை

காவிரியில் நதிநீர் விவகாரம் தொடர்பான தமிழகம் மற்று‌ம் கர்நாடக அரசுகளின் மனு‌க்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று‌ விசாரணைக்கு வருகிறது‌. டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் விவசாய பயிர்களை காப்பாற்ற, கர்நாடக அரசு காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து‌விட வேண்டும் என்று‌ உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு‌ தாக்கல் செய்திருந்தது‌. இதேபோல், கர்நாடக அணைகளில் உள்ள நீர், தங்கள் மாநிலத்தின் குடிநீர் தேவைக்காக ப ...

Read more

கர்நடகாவில் பாஜக அரசுக்கு நெருக்கடி

கர்நாடகாவில் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து அரசுக்கு ஏற்பட்டு நெருக்கடி குறித்து விவாதிக்க, முதலமைச்சர் ஜெகதீஸ் ஷெட்டர் பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத்சிங்கை இன்று சந்தித்து பேசி உள்ளார். கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கடந்த 23ம் தேதி பதவிகளை ராஜினாமா செய்தனர்‍. இந்த உறுப்பினர்கள், இன்று சபாநாயகரை சந்தித்து முறைப்படி ர ...

Read more

கர்நாடக அரசுக்கு ஆபத்து நீடிப்பு – 9 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா

கர்நாடகாவில் எடியூரப்பா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேர் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளநிலையில், மேலும் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் பாரதிய ஜனதா ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கர்நாடகா அமைச்சரவையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எடியூரப்பாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கடந்த 23ம் தேதி தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்‍. ஆனால், சபாநாயகர் வெளியூர் சென்றி ...

Read more

கர்நாடகா பாஜ அரசுக்கு சிக்கல், பெரும்பான்மை இருக்கிறது-ஷெட்டர்

கார்நாடகாவில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு பெரும்பான்மை பெற்றிருப்பதாக முதலமைச்சர் ஜெகதீஸ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்‍. பாரதிய ஜனதாவில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சி துவங்கியுள்ள எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 2 மந்திரிகள் உள்பட 14 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும்‌, ஜெகதீஸ் ஷெட்டர் பதவி விலக வேண்டும் என்றும் எ ...

Read more

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசு உச்சநீதி மன்றத்தில் புதிய மனு தாக்கல்

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசு உச்சநீதி மன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. அதில் நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு தொடர்பான வழக்குகளை உடனே விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தீர்ப்பினை அரசிதழில் வெளியிடக்கூடாது என்று கர்நாடக அரசு பிடிவாதமாக கூ ...

Read more

கிங்பிஷர் விமான‌ நிறுவனத்தை மீட்க 1000 கோடி ரூபாய் தேவை – அஜித்சிங்

கிங்பிஷர் விமான‌ நிறுவனத்தை கடனிலிருந்து மீட்க, 1000 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் ‌என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜித்சிங் தெரிவித்துள்ளார். அதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளவே, கிங்பிஷர் நிறுவனத்து‌க்கு‌ 6 மாத கால அவகாசமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். பங்குதாரார்கள்,‌ கடன் கொடுத்த வங்கிகள், ஊதியம் நிலுவையில் உள்ள பணியாளர்கள் என பலதரப்பினரின் குறைகள் நீக்கப்பட்டால்தான், கிங ...

Read more

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை இம்மாத இறுதியில் அரசிதழில் வெளியிட மத்திய அரசு முடிவு

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை இம்மாத இறுதியில் அரசிதழில் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக டெல்டா மாவட்ட விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைக்கு உயிர் ஆதாரமான காவிரியில், தண்ணீர் திறந்து விட, கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. இதையடுத்து, காவிரியின் நீர் இருப்பு குறிந்து ஆய்வு செய்து, உரிய உத்தரவு பிறப்பிக்க காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அனைத்து அம்சங்களையும் ஆர ...

Read more

கர்நாடக ஜனதாவை தோற்கடிக்க முடியாது – எடியூரப்பா

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் கர்நாடக ஜனதா கட்சியை தோற்கடிக்க முடியாது என்று அக்கட்சியின் தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு நகரில் பேசிய அவர்‌, வருகிற சட்டசபை தேர்தலில் கர்நாடகா ஜனதா கட்சி தனித்து போட்டியிடபோவதாக தெரிவித்துள்ளார்‍. கர்நாடக ஜனதா கட்சியை தோல்வி அடைய செய்ய, பாரதிய ஜனதாவும், ஜனதாதளம் கட்சிகள் எத்தகைய சாகசங்கள் செய்தாலும ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top