Home
You Are Here: Home » News » Karnataka (Page 8)

45 நாட்களில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அறிவித்தார் அன்னா ஹசாரே

இன்னும் 45 நாட்களில் தனது ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் துவக்க உள்ளதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பிடர் மாவட்டத்தில், பசவா ஸ்ரீ விருதை பெற்ற பின் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், ஜன் லோக்பால் விவகாரத்துடன் தனது போராட்டம் முடியவில்லை என தெரிவித்தார். உறுப்பினர்களை விலக்கும் மற்றும் திரும்ப பெறும் உரிமைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் ...

Read more

மத்தியில் இனி மாநில கட்சிகளே ஆட்சி நடத்தும் நிலை உருவாகும் – கர்நாடக ஜனதா கட்சித்தலைவர் எடியூரப்பா

மத்தியில் இனி மாநில கட்சிகளே ஆட்சி நடத்தும் நிலை உருவாகும் என்று கர்நாடக ஜனதா கட்சித்தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக ஜனதா கட்சியின் தொழிலாளர் பிரிவு தொடக்க விழா பெங்களூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் எடியூரப்பா, தேசிய கட்சிகளால் மாநிலம் வளர்ச்சி அடையும் என்பது சாத்தியமில்லை என்று கூறினார். இதற்கு மாநில கட்சிகளின் உதவி கட்டாயமாக தேவை என்றும் இதை கருத்தில் கொண்டே, தா ...

Read more

கர்நாடக அமைச்சர்களின் ராஜினாமாவில் காங்கிரஸ் கட்சியின் பின்னணி – ஜெகதீஷ் ஷெட்டர்

கர்நாடக அமைச்சர்களின் ராஜினாமாவில் காங்கிரஸ் கட்சியின் பின்னணி உள்ளதாக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் குற்றஞ்சாட்டி உள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். பா.ஜ.க.வின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக காங்கிரஸ் கட்சி பின்னணியில் உள்ளதாக முதலமைச்சர் ஷெகதீஸ் ஷெட்டர் குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் விரைவி ...

Read more

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை நிறைவேற்ற கோரிக்கை ,பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை உடனே நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்‍. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்‌,காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசை தாம் தொடர்ந்து வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டு்ள்ளார்‍. அதன்படி அரசிதழில் வெளியிட நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்‍. காவிர ...

Read more

காவிரி மேலாண்மையை அமைக்க கூடாது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஸ் ஷெட்டர் பிரமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம்

காவிரி நடுவர் மன்றம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் காவிரி மேலாண்மையை அமைக்க கூடாது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஸ் ஷெட்டர் பிரமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார் இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் காவிரி நடுவர் மன்றம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவிரி மேலாண்மை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என ...

Read more

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான தடையை, மேலும் 6 வாரங்கள் நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது‌, 22 போலீசார் கண்ணி வெடி வைத்து‌ கொல்லப்பட்டதாக, அவரது கூட்டாளிகள் ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து‌, குடியரசுத்தலைவருக்கு அனு‌ப்பி வைக்கப்பட்ட கருணை மனு‌வும், நிராகரிக்கப்பட்டதால், விரைவில் அந்த நால்வரும் தூக்கிலிடப்படுவார்கள் என்று‌ கூறப்பட்டது‌. இதனால், அவசர அவசரமாக, தூக்கு தண்டனையை எதிர்த்து‌ உச்சநீத ...

Read more

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசு இன்று அரசிதழில் வெளியிட்டது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம்- கர்நாடகா இடையே ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 16 ஆண்டுகளாக விசாரணை நடந்து கடந்த 2007 பிப்ரவரி 5ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கர்நாடகாவில் காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் பாயும் 736 டி.எம்.சி. தண்ணீரில் கர்நாடகாவுக்கு 272 டிஎம்சியும், தமிழ்நாட்டிற்கு 419டிஎம்சியும், கேரளாவுக்கு 30டிஎம்சியும், புதுச்சேரிக்கு 5 மற்றும் சுற்ற ...

Read more

எடியூரப்பாவின் புதிய கட்சிக்கு “தேங்காய்” சின்னம் வழங்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல்

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் புதிய கட்சிக்கு "தேங்காய்" சின்னம் வழங்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பாரதிய ஜனதாவில் இருந்து விலகிய எடியூரப்பா, கர்நாடகா ஜனதா என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார்‍. அவருடைய கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தில் கர்நாடக மாநிலத்தில் 47வது கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதிய கட்ச ...

Read more

தமிழ்நாட்டுக்கு இனிமேல் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் திட்டவட்டம்

தமிழ்நாட்டுக்கு இனிமேல் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹூப்ளியில் பேசிய அவர், உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என்பதற்காக காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்து விட்டதாக தெரிவித்தார். மாநிலத்தில் தற்போது வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை இருப்பதால், தமிழகத்திற்கு இனிமேல், காவிரியில் தண்ணீர் திறந்து விட ...

Read more

காவிரி வழக்கு விவர அறிக்கையை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு கெடு

காவிரியில் இருந்து கடந்த 20 வருடங்களில் கர்நாடக அரசு, தனது குடிநீர் தேவைக்காக எவ்வளவு தண்ணீர் எடுத்தது மற்று‌ம் தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறந்து விட்டது என்பது‌ உள்ளிட்ட விபரங்களை இன்று பிற்பகளுக்குள் சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு குறைந்தபட்சமாக 12 டிஎம்சி நீரை திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top