Home
You Are Here: Home » News » Karnataka (Page 7)

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கர்நாடக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பணம் வசூல் செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கர்நாடக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் வி.சசிதர் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவில் கூறிய அவர்‌,சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பிக்க கட்சி நிதியாக 10 ஆயிரத்து 100 ரூபாய் கட்டணம் செலுத்தியதாக தெரிவித்தார்‍.மேல ...

Read more

கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட ஏப்ரல் 2வது வாரத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளார்களை அறிவிக்கிறது. இதில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஏப்ரல் 2வது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி. தேவ் கவுடா தெரிவித்துள்ளார். ஏப்ரல் 10ம் தேதி 224 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கட்சியின் மாநில தலைவர ...

Read more

பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடாக தடுப்பணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் – தமிழக முதல்வர் வலியுறுத்தல்

பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடாக தடுப்பணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆற்றின் நடுவே கர்நாடகா அரசு தடுப்பணை கட்டினால் தமிழகம் பாதிக்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். தடுப்பணை கட்டுவதன் மூலம் பெண்ணையாற்றை தமது பகுதி பாசனவசதிக்கு திருப்ப கர்நாடகா முயற்சிப்பதாக ஜெயலலிதா குற்றச்சாட்டியுள்ளார். ஆற்றின ...

Read more

கர்நாடக சட்டப்பேரவைக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளது – ஜெகதீஷ்ஷெட்டர்

கர்நாடக சட்டப்பேரவைக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளது என்று அம்மாநில முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்தார். ஹுப்ளியில் மாநில பாஜக தலைவர் பிரகலாத்ஜோஷியின் சகோதரர் கோவிந்த ஜோஷியில் இல்லத்தில் நடந்த சிற்றுண்டி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஷெட்டர் இதனை செய்தியாளர்களிடம் கூறினார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பாஜக பட்டியல் தயாராக உள்ளது. இதனை இறுதி வடிவம் கொடுக்கும் ...

Read more

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 5-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 5-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறு‌ம் என்று‌ தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்து‌ள்ளார். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபையின் பதவி காலம் வரும் ஜீன் மாதம் 3-ம் தேதியுடன் நிறைவடைகிறது‌. இந்நிலையில், அந்த மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதியை, தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் இன்று‌ டெல்லியில் அறிவித்தார். மே மாதம் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறு‌ம் என்று‌ம், மே மாதம் ...

Read more

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் காவரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியாகி ஒரு மாதம் ஆகியும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட ...

Read more

கர்நாடக உள்ளாட்சி தேர்தல் முடிவு

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் பெரும்பாலான வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவும், எடியூரப்பா கட்சியும் தோல்வியடைந்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் கடந்த 7-ந்தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. 7 மாநகராட்சிகள், 43 நகராட்சிகள், 64 பேரூராட்சிகள் மற்றும் 93 நகர பஞ்சாயத்துகள் அடங்கிய 207 உள்ளாட்சி அமைப்புகளுக்கு அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தே ...

Read more

புதிய தலைவரை தேர்தெடுப்பதற்காக பா.ஜ.க மூத்த தலைவர் அருண் ஜெட்லி பெங்களூர் விரைகிறார்.

கர்நாடக பா.ஜ.க தலைவர் பதவியில் இருந்து ஈஸ்வரப்பா பதவி விலகியதை தொடர்ந்து புதிய தலைவரை தேர்தெடுப்பதற்காக பா.ஜ.க மூத்த தலைவர் அருண் ஜெட்லி பெங்களூர் விரைகிறார். கர்நாடாக பாரதீய ஜனதா தலைவராக பதவி வகித்து வந்த ஈஸ்வரப்பா துணை முதல்வராகவும் வருவாய்த் துறை அமைச்சராகவும் பணியாற்றி வந்தார். ஈஸ்வரப்பா மீது நில மோசடி புகார் கூறப்பட்டதால் அவரை பதவியில் இருந்து நீக்கும்படி எதிர்கட்சிகள் போர்கொடி தூக்கின . இதையடுத்து க ...

Read more

சிபிஐ வழக்கிற்கு அஞ்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக கூறுகிறார் எடியூரப்பா – ஜெகதீஷ்ஷெட்டர்

சிபிஐ வழக்கிற்கு அஞ்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக கூறுகிறார் எடியூரப்பா என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வரும் 7ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், எடியூரப்பா மீதான வழக்கை சிபிஐ விசாரித்து வருவதால் அந்த வழக்கில் இருந்து தப்புவதற்காக காங்கிரஸ் ...

Read more

கர்நாடக ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் – எடியூரப்பா நம்பிக்கை

கர்நாடக சட்டசபை தேர்தலில், கர்நாடக ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சரும், கர்நாடக ஜனதா கட்சி தலைவருமான எடியூரப்பாவின் 71-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் வறட்சி நிலவுவதால் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டாம் என்று தொண்டர்களை கேட்டுக் கொண்டதாக கூறி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top