Home
You Are Here: Home » News » Karnataka (Page 2)

சென்னை சென்ட்ரலில் குண்டு வெடித்த போது ஓடிய மர்ம நபரின் உருவம் பெங்களூர் சி.சி.டி.வி.யிலும் பதிவு

சென்னை சென்ட்ரலில் குண்டு வெடித்த போது ஓடிய மர்ம நபரின் உருவம் பெங்களூர் சி.சி.டி.வி.யிலும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாத நிலையில், குண்டு வைத்த தீவிரவாதிகளுக்கு எதிரான ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகிறார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசா ...

Read more

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து‌க்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து‌க்குவிப்பு வழக்கில், இன்று‌ம் அரசு வழக்கறிஞர் ஆஜராகததால், வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது‌. முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து‌க்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று‌ வருகிறது‌. இந்நிலையில், ஜெயலலிதா சொத்து‌க் குவிப்பு வழக்கு விசாரணையில், புதியதாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, முன்பு இன்று‌ இறு‌திக்கட்ட விசாரணை நடைபெறு‌வதாக இருந்த ...

Read more

பெங்களூருவில் 4 கோடி ரூபாய் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 4 கோடி ரூபாய் மதிப்புடைய கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெங்களூரு கே. ஆர் புரம் விநாயகா லே அவுட் பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகளுடன் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார், வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி ரூபாய் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய ...

Read more

எடியூரப்பா மீண்டும் பாஜகவில் இணைந்தார்

கர்நாடாக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியின் போது முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, ஊழல் புகார் காரணமாக பதவி இழந்தார். கைதாகி சில நாட்கள் சிறையில் இருந்த எடியூரப்பா, ஜாமினில் விடுதலையானவுடன், தனக்கு மீண்டும் முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்று பாஜக தலைமையை பல்வேறு வகையில் மிரட்டினார். ஆனால் அதற்கு பாஜக மறுத்ததால் அக்கட்சியில் இருந்து விலகி, கர்நா ...

Read more

எடியூரப்பா பாஜகவில் இணைய முடிவு

பாரதிய ஜனதா கட்சியில் இணைவது குறித்து ஐந்து தினங்களில் முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்‍. கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியின் போது முதலமைச்சராக இருந்த எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அப்பதவியை இழந்தார்‍. இதையடுத்து பாஜகவில் இருந்து விலகி, கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார்‍. இதில், 10 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று அவர ...

Read more

ஜெயலலிதாவிடம் கைப்பற்றப்பட்ட அசையும் சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும் என்று பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவிடம் கைப்பற்றப்பட்ட அசையும் சொத்துக்களை வரும் 21 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பெங்களூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அசையும் சொத்துக்களை பெங்களூர் கொண்டுவரக்கோரி, திமுக எம்.பி. தாமரைச்செல்வன் தொடர்ந்த வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 1997 ஆம் ஆண்டு ஜெயலிலதா, சசிகலா உள்ளிட்டோர் மீது வருமானத்துக ...

Read more

சபரிமலைக்கு செல்லு‌ம் பக்தர்களின் வசதிக்காக 18 சிறப்பு ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு

சபரிமலைக்கு செல்லு‌ம் பக்தர்களின் வசதிக்காக 18 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து‌ள்ளது‌. அதன்படி, சென்னை-எர்ணாகுளம் செல்லு‌ம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் து‌வங்கியது‌. சபரிமலையில் மகரவிளக்கு மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசல்களை தவிர்க்க பக்தர்கள் சிறு‌ சிறு‌ குழுக்களாக அனுப்ப படுகின்றனர். இந்நிலையில் பலவேறு மாவட்டங்களில் ...

Read more

கேரளாவில் இருந்து ‌பெங்களூருக்கு தமிழகம் வழியாக எரிவாயு குழாய் பதிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

கேரளாவில் இருந்து ‌பெங்களூருக்கு தமிழகம் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் நிறு‌வனத்தின் திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து‌ள்ளது‌. மத்திய அரசின் எண்ணெய் நிறு‌வனமான கெயில் நிறு‌வனம் கேரளாவில் இருந்து‌ பெங்களுருக்கு, எண்ணெய் குழாய் பதிக்க திட்டமிட்டது‌. இதையடுத்து‌, கோவை, ஈரோடு, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதிக்க கெயில் நிறு‌வனம் குழிதோண்டியது‌ ...

Read more

கனிம சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட் நேற்றிரவு பதவியை ராஜினாமா செய்தார்

கனிம சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட் நேற்றிரவு தனது பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவரது அமைச்சரவையில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தகவல் துறை அமைச்சராக இருந்தவர் சந்தோஷ் லாட். இவர் கனிம சுரங்க நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளார். இந்த நிலையில், அவரது கனிம சுரங்க நிறுவனம் சட்டவிரோத சுரங்க தொழிலில் ஈடுபட்டதாக புகார் ...

Read more

தமிழகத்தில் ஏ.டி.எம்.மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தும் நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது

பெங்களூருவில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற பெண் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஏ.டி.எம்.மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது. பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண் மர்மநபரால் சரமாரியாக தாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து கர்நாடகாவில் உள்ள ஏடிஎம ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top