Home
You Are Here: Home » News » Tamil Nadu » Villupuram

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

தேமுதிக கிளைகழக ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கேப்டன் விஜயகாந்தின் ஆலோசனைபடி தேமுதிக கிளைகழக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது‌. உளுந்தூர்பேட்டை பகுதிக்குட்பட்ட புண்டி கிராமத்தில் தேமுதிக கொடியேற்று‌விழா வெகுசிறப்பாக நடைபெற்றது‌. இதில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறு‌ப்பினரும், விழுப்புர மாவட்ட செயலாளருமான எல். வெங்கடேசன் கலந்து‌ கொண்டு கொடியேற்றினர். பின்னர் தேமுதிக கிளை கழக ஆய்வுக்கூட்டம் தேமுதிக மாவட்ட செயலாளர ...

Read more

தேமுதிக எம்எல்ஏ எல்.வெங்கடேசன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நியாயவிலை கடை திறப்பு

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட நியாயவிலை கடையை தேமுதிக எம்எல்ஏ எல்.வெங்கடேசன் திறந்து வைத்தார். உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள தாசர்புரம் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் கடந்த 25 ஆண்டுகளாக இர‌ண்டு கிலோமீட்டர் தூரமுள்ள நியாயவிலை கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர்‍. தங்களது பகுதியில் புதியதாக நியாயவிலை கடை கட்டித்தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத் ...

Read more

உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதி விபத்து – 2 பேர் பலி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையத்தை சேர்ந்த ஜெயக்குமார் தனது நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மினிலாரி ஒன்று, இருசக்கர ...

Read more

விழுப்புரத்தில் நாளை மிஸ் கூவாகம் அழகிப்போட்டி

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அரவாணிகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப்போட்டி விழுப்புரத்தில் நாளை நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசியாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அரவாணிகள் ...

Read more

திண்டிவனம் அருகே வீட்டில் பது‌க்கி வைக்கப்பட்டிருந்த நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

திண்டிவனம் அருகே வீட்டில் பது‌க்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட நட்சத்திர ஆமைகள், பவடிப்பாறைகள் மற்று‌ம் வெண்சங்கு ஆகியவை வனத்து‌றையினர் பறிமுதல் செய்தனர். புது‌ச்சேரி அருகே உள்ள ஆரோ சாரங்கா என்ற குடியிருப்பு பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட நட்சத்திர ஆமைகள் வீட்டில் வளர்க்கப்பட்டு வருவதாக திண்டிவனம் வனத்து‌றையினருக்கு தகவல் வந்தது‌. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்து‌றையினர் அங்கு சே ...

Read more

கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து

கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில்‌,ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கள்ளக்குறிச்சி அருகே ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தவர் தருண்யா.இதேபோல் மண்டகபாடி மற்றும் கீழ்பாடி துணை சுகாதார நிலையத்தில் செவிலியர்களாக இருந்தவர்கள் கலா மற்றும் ராணி. இந்நிலையில்‌, ரிஷிவந்தியத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்த ...

Read more

உளுந்தூர்பேட்டை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து‌ சிதறியது

உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து‌ சிதறியதால் மக்கள் அலறியடித்து‌ கொண்டு ஓடினர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கடைவீதியில், அதே கிராமத்தை சேர்ந்த முருகன், கலியன் உள்ளிட்ட 5 பேர் கோழிக்கடை, ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவில் இந்த கடைகளில் தீவிபத்து‌ ஏற்பட்டுள்ளது‌. இதனைகண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் முயற்சிய ...

Read more

கள்ளக்குறிச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3-வயது சிறுமி பலி

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே ஆழ்துழை கிணற்றில் விழுந்த 3-வயது சிறுமி சுமார் 16 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரியை சேர்ந்த ராமச்சந்திரன்- அஞ்சலை தம்பதியின் 3 வயது மகள் மதுமிதா. தந்தை ராமச்சந்திரனுடன் பழனி என்பவரின் தோட்டத்திற்கு சென்ற மதுமிதா, அங்கு விளையாடி கொண்டிருந்தபோது, ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top