Home
You Are Here: Home » News » Tamil Nadu » Vellore (Page 8)

வேலூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் வேலூரில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்‍. அப்போது பேசிய அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சக்திவேல் , காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும்‌, வறட்சியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கும் நிவாரண நிதியினை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்‍. மேலும் இப்பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் உடனட ...

Read more

இரு சக்கர வாகன ஷோரூமில் தீ – மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சேதம்

வேலூரில் இயங்கி வந்த இருசக்கர வாகன ஷோருமில் திடீரென தீப்பிடித்ததில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. வேலூர் மத்திய பேருந்து நிலையம் அருகே சம்பத்குமார் என்பவருக்கு சொந்தமான டிவிஎஸ் ஷோரூமில்தான் இந்த விபத்து நடைபெற்றது. இரவு 11 மணி அளவில் ஷோரூமின் முதல்தளத்தில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து தீயை அணைப்பதற்கு வேலூர், காட்பாடி, ஆம்பூர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த ...

Read more

செல்போனில் படம் பிடித்து பெண்ணுக்கு மிரட்டல்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே திமிரியில் இளைஞர்கள் இருவர்‌, அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை செல்போனில் புகைப்படம் பிடித்து மிரட்டியதால்‌, அந்த பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்‍. ஆபத்தான நிலையில் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண்ணை மிரட்டியதாக, கல்லூரி மாணவர் சரத்குமார்‌, 11ம் வகுப்பு பள்ளி மாணவர் ஏழுமலை ஆகியோரை போலீசார் கைது செய்த ...

Read more

புதைக்கப்பட்ட உடல் வெளியே வீசியிருந்ததால் சர்ச்சை

வேலூர் மாவட்டம் கருகம்பத்தூர் அருகே புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலை வெளியே எடுத்து வீசப்படிருந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பாலாற்றங்கரை கிராமத்திற்கு சொந்தமான இடுகாட்டினருகே இறந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதை கண்டு கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பொதுமக்களிடம் நடத்திய விசாரணையில்‌, அப்பகுதியிலேயே பிணத்தை தோண்டி எடுத்தது போன்ற குழி காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ...

Read more

வீரபாண்டிய கட்ட பொம்மனின் 254 வது பிறந்த நாள் விழா

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்ட பொம்மனின் 254 வது பிறந்த நாள் விழா பல இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்துள்ள தார்வழி என்ற கிராமத்தில் கட்ட பொம்மனின் பிறந்த நாள் விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதையொட்டி அவருது திருவுருவ படத்திற்கு மாலை மணிவித்து கிராம மக்கள் மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பட்டாசு வெடித்தும் ஆடி பாடி மகிழ்ந்தனர். இதேபோல் குன்னூரில் கட்டபொம்மனின் ...

Read more

கடத்தப்பட்ட மண்ணுளிப்பாம்பு மீட்பு

குடியாத்தத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற மண்ணுளிப்பாம்பு வனத்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்திலிருந்து வெளிநாட்டிற்கு மண்ணுளிப்பாம்பு கடத்தப்படுவதாக குடியாத்தம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அவர்கள் தீவிர வாகனச் சோதனையிலும், ரோந்துப்பணியிலும் ஈடுபட்டு வந்தனர்‍. அப்போது குடியாத்தம்-சித்தூர் முகாம் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ...

Read more

குழந்தைத் தொழிலார்களை பணிக்கு அமர்த்திய பேக்கரி கடைக்கு சீல் வைப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூரில்,குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய பேக்கரி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், ஆம்பூரில் உள்ள வணிக நிறுவனங்களில் குழந்தைகள் நல வாழ்வு திட்ட அலுவலர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பேக்கரி கடையில், 12 மற்றும் 14 வயதுள்ள 2 சிறுவர்கள் பணிபுரிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டனர். அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதாக விசாரணை ...

Read more

திருப்பத்தூர் அருகே 9 வயது சிறுமி படுகொலை

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது 9 வயது மகள் காயத்ரி அங்குள்ள அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த காய்த்ரி, அருகில் உள்ள கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. வெகுநேரம் ஆகிய ...

Read more

மாட்டுவண்டி மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே மாட்டுவண்டி மோதி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் சங்கீதா விடுமுறைக்காக தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். தெருவில் சக மாணவிகளுடன் விளையாடி கொண்டிருந்த போது, எதிரே வேகமாக வந்த மாட்டுவண்டி மாணவி மீது மோதியது. இதில் வண்டி சக்கரத்தில் சிக்கிய மாணவி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். வ ...

Read more

வேலூர் அருகே பரபரப்பு

வேலூர் அருகே மின்கசிவால் தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட மின்சாரப் பொருட்கள் சேதமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் அருகே கொணவட்டத்தில் வசிக்கும் இருவர், வீ்ட்டின் முன் சென்ற மின்சாரகம்பிகளின் மீது மணல் மூட்டைகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மின்கம்பிகள் ஒன்றொடு ஒன்று உரசி மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கொணவட்டம் கிராமத்திலுள்ள 80க்கும் மேற்பட்ட தொலைக்காட் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top