Home
You Are Here: Home » News » Tamil Nadu » Vellore (Page 3)

வேலூர் மத்திய சிறையில் இருந்து ஆயுள்தண்டனை கைதி ஒருவர் தப்பியோட்டம்

வேலூர் மத்திய சிறையில் இருந்து ஆயுள்தண்டனை கைதி ஒருவர் தப்பியோடிவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மத்திய சிறையில் சிவகாசியை சேர்ந்த நடராஜன் என்ற ஆயுள்தண்டனை கைதி 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்ட்டு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆயுள்தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இவர் 5 ஆண்டு நன்னடைத்தை அடிப்படையில் சிறையின் வெளி வளாகத்தை சற்றியுள்ள ...

Read more

வேலூர் அருகே தனியார் நிர்வாகம் அடாவடி

வேலூர் அருகே 22 ஏக்கர் விவசாய நிலத்தை தனியார் மருத்துவமனைக்கு விற்க மறுத்த 25 விவசாய குடும்பங்களை, சுவர் கட்டி வெளியே வர வழியின்றி அரசையும் மிஞ்சி அடாவடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அருகே வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பூட்டுதாக்கு என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனை தனது மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்காக விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி ...

Read more

மலைவாழ் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – வனக்காவலருக்கு தர்ம அடி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மலைவாழ் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கிராம மக்கள், வனக்காவலரை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம்பூர் அருகே மாதனூர் வனச்சரகத்திற்குட்பட்ட தோட்டாளம் பகுதியில் வனக்காவலராக பணியாற்றி வரும் ராமச்சந்திரன் என்பவர் நாயக்கனேரி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த தங்கராஜின் மனைவி கோமதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து‌ள்ளார். அப்போது‌ கோம ...

Read more

அரசு மதுபானக் கடையால் பொது மக்கள் அவதி – புகார் அளிப்பவர்களுக்கு கொலை மிரட்டல்

வேலூர் மாவட்டம் சங்கரன்பாளையத்தில் உள்ள அரசு மதுபானக் கடையை அதிமுக பெண் பிரமுகர் நடத்தி வருவதால் அங்கு நடைபெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் அனைத்தும் மூடி மறைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சங்கரன்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை அதிமுக மகளிர் அணியை சேர்ந்த சரசா என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த பாரில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கும்‌, மது குடிக்க வந்த ஒருவருக்கும் இடையே ...

Read more

குடியாத்தம் அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது

குடியாத்தம் அருகே 8ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 65 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். குடியாதத்தை அடுத்த ராஜகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். 8ம் வகுப்பு படிக்கும் இவரது மகள் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது, அப்பகுதியை சேர்ந்த ரத்தினம் என்பவர் தனியாக அழைத்து சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததை ...

Read more

இந்திய கடற்படை விமான தள வளாகத்தில் நுழைந்த இளைஞர் கைது

வேலூர் மாவட்டத்தில், பலத்த பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் இந்திய கடற்படை விமான தளமான ஐஎன்எஸ் ராஜாளி வளாகத்தில் புகுந்த வடமாநில இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் அமைந்துள்ளது. பலத்த பாதுகாப்புடன் கூடிய இந்த விமானதளத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் அத்துமீறி புகுந்துள்ளார். அவரை பாதுகாப்பு பணியிலிருந்தவர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ...

Read more

வாலாஜாபேட்டை அருகே பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த நான்கு இளைஞர்கள் கைது

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்‍. வாலாஜாபேட்டை அருகே சென்னசமுத்திரம் சுங்கசாவடி பகுதியில் வாலாஜாபேட்டை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்‍. அப்போது சென்னையில் இருந்து வாலாஜா நோக்கி வந்த அரசு பேருந்தை சோதனையிட்டபோது, பேருந்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற 4 இளைஞர்களை காவல்துறையினர் மடக்க ...

Read more

அமைச்சர் கே.சி.வீரமணியை பொதுமக்கள் முற்றுகை

வேலூர் அருகே அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூரை அடுத்த கீழ்மொனவூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக கட்டிட வளாகத்தில் மரம் நடுவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியை‌ அப்பகுதி மக்கள் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ...

Read more

விழிப்புணர்வு ஊர்வலம் சென்ற மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர் கொடுக்காமல் கொடுமை

வேலூரில் விழிப்புணர்வு ஊர்வலம் என்ற பெயரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர் கொடுக்காமல் கொடுமை படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடிநீர் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு வேலூரில் நடைபெற இருந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை நேற்று மாலை 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் துவக்கி வைப்பதாக இருந்தது. இதனை முன்னிட்டு வேலூரில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 2 மணி முதலே பேர ...

Read more

தென்னிந்திய அளவில் மகளிருக்கான கபடி போட்டி

தென்னிந்திய அளவில் மகளிருக்கான கபடி போட்டி ஜோலையார்பேட்டையில் கோலாகலமாக நடைபெற்றது‌. இந்த போட்டியை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது‌மக்கள் கண்டுகளித்தனர். வேலூர் மாவட்டம் ஜோலையார்பேட்டை விளையாட்டு திடலில் நடைபெற்ற இந்த தென்னிந்திய அளவிலான மகளிர் கபடி போட்டியில் பல்வேறு‌ பகுதிகளில் இருந்து‌ 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து‌ கொண்டன. பரபரப்பாக நடைபெற்ற இந்த கபடி போட்டியின் இறு‌தி சுற்றில் மது‌ரை சக்தி டைல ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top