Home
You Are Here: Home » News » Tamil Nadu » Vellore (Page 2)

வெடிபொருட்களுடன் சுற்றித்திரிந்த மர்மநபர் கைது

அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெடிபொருட்களுடன் சுற்றித்திரிந்த மர்மநபரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அரக்கோணம் ரயில்வே நிலையத்தில் போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்தவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவ ...

Read more

ராணிப்பேட்டையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில், வெடிகுண்டு ஒன்று‌ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது‌. மேலு‌ம், சென்னையில் இரண்டு‌ இடங்களுக்கு இன்று‌ வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், மக்கள் அச்சமின்றி வாழ இயலாத சூழல் நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வேலூர் மாவட்டம் ராணிபேட்டை பெல் நிறுவன பணியாளர்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு அருகே, தனியார் சூப்பர் மார்க்கெட் அருகில், 200 எம்.எல்.பாட்டில் ஒன்றில் த்ரி மற் ...

Read more

வேலூர் அருகே திடீரென வீசிய சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதம்

வேலூர் அருகே திடீரென வீசிய சூறாவளி காற்றால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தது. வேலூர் மாவட்டம் கேவிகுப்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொசவன்புதூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது சூறாவளி காற்று வீசி வருவதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் வாழை மரங்கள் பயிரிட்டு உள்ளனர்‍. இந்நிலையில் இப்பகுதியில் வீசி ...

Read more

சோளிங்கர் அருகே உள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் ஆலய திருவிழா

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள பாணாவரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த தீமிதி திருவிழாவில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். வேண்டிய வரம் கிடைக்கும் பொருட்டு கோவிந்தா முழக்கங்களுடன் அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் வழிபட்டனர். பழனி தாராபுரம் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயி ...

Read more

குடியாத்தம் அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது‌

குடியாத்தம் அருகே விவசாயிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவரை லஞ்சம் ஒழிப்பு து‌றையினர் கைது‌ செய்து‌ள்ளனர். குடியாத்தம் அருகே செம்பேடு காலனி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி தாண்டவன். இவர் நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறை கட்டுவதற்கான நிதியை பெற ஊராட்சி மன்ற தலைவராக உள்ள திமுகவை சேர்ந்த ரமேஷ் என்பவரை அனு‌கி உள்ளார். அப்போது‌ கழிவறை கட்டுவதற்கான நிதியை ஒது‌க்கீ ...

Read more

மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 1330 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

காவேரிப்பாக்கம் அருகே மினி லாரியில் கடத்திய 1330 லிட்டர் எரிசாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பாலாற்றில் திருட்டு்த்தனமாக மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் மணல் கடத்தலை தடுக்க சோதனை மேற்கொண்டனர். அப்போது பலாற்றில் மினி லாரி ஒன்று சிக்கியதால் அதை மீட்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அருகே காவ ...

Read more

வேலூர் அருகே பேரூராட்சியின் நிதி ஒரு கோடிக்கு மேல் மோசடி ஆதாரத்துடன் புகார்

வேலூர் அருகே பேரூராட்சியின் நிதி ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தபட்ட அதிகாரியை கைது செய்யும்படி சமூக ஆர்வலர் அரசுக்கு ஆதாரத்துடன் புகார் செய்துள்ளது, இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் கடந்த 2013ம் ஆணடு செயல் அலுவலராக பணியாற்றிய வாசுதேவன் என்பவர், தனது பதவி காலத்தில், சுகாதாரப் பணிகளை மேற்கொண்ட வகையில், 31 லட்சம் ரூபாய் செலவிட்டதாகவும், ...

Read more

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் பெண் கைதி தற்கொலை

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் விழுப்புரத்தை சேர்ந்த பெண் கைதி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் தொரப்பாடி பகுதியில் உள்ள பெண் குற்றவாளிகளுக்கான தனிச்சிறையில் ஏராளமான பெண் கைதிகள் உள்ளனர்.. இங்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிலட்சுமி என்ற பெண் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.. இந்நிலையில் ஆதிலட்சுமி நேற்று சிறையில் தூக்கு போட் ...

Read more

ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் கூடாததால் அமைச்சர்கள் அப்செட்

வேலூரில் ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் கூடாததால் அமைச்சர்கள் செய்வதறியாமல் திகைத்து‌ நின்றனர். வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செங்குட்டுவனை ஆதரித்து‌ ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டம் வேலூரை அடுத்த இறைவன்காடு பகுதியில் நடைபெற்றது‌. மாவட்டம் முழுவது‌ம் பணத்தை தண்ணீராக வாரிஇறைத்து‌ம் மக்கள் கூட்டத்தை கூட்டமுடியாமல் தவித்தனர் அதிமுகவினர். இதனிடையே கூட்டம் குறைவாக இருந்ததால் பயந்து‌ ...

Read more

குடியாத்தம் அருகே தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் வெடிமருந்துகள் வெடித்து சிதறியது

குடியாத்தம் அருகே தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் குடோன் ஒன்றில் வெடிமருந்துகள் வெடித்து சிதறியது. இதனால் தொழிலாளர்கள் பீதியுடன் வெளியே ஓடினர். இந்த வெடிவிபத்து காரணமாக அந்த குடோன் கட்டிடம் சேதமடைந்தது. குடியாத்தம் அருகே கூடநகரம் பகுதியில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தீப்பெட்டி ஆலை வளாகத்தில் வெடிமருந்து கிடங்கில் இருப்பு வைத்திருந்த வெடிமருந்துகள் நேற்று திடீரென்று வெடி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top