Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruvannamalai (Page 6)

பைக் மீது வேன் மோதல், இருவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கு ‌சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆரணி இ.பி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் தனது மகள்கள் தீபா, மதுமிதா ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் களம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். முள்ளிப்பட்டு அருகே சென்ற போது, போளூரில் இருந்து ஆரணி நோக்கி வந்த வேன் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இ ...

Read more

ஆலயங்களில் நடைபெற்ற ஆரூத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயிலில், ஆடும் திருக்கோலத்தில் நடராஜரின், ஆறு அடி உயர பச்சை மரகத சிலை உள்ளது. ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில், ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜரின், திருமேனி மீது பூசப்பட்டிருந்த சந்தன காப்பு களையப்பட்டது. பின்னர் நடராஜர் மீது சந்தனாதி தைல ...

Read more

கடலூர் மற்றும் வந்தவாசியில் கல்லூரி புறக்கணிப்பு

இலவச மடிக்கணினி வழங்காததைக் கண்டித்து திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள அரசு கலை கல்லூரி மாணவர்கள், இலவச மடிக்கணினி வழங்கக் கோரியும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும் 300க்கும் மேற்பட்டோர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் கூடுதல் கட்டி ...

Read more

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உண்ணாவிரதம்

ஊரக வளர்ச்சி துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்‌, மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பன உட்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திருச்சியில் சிந்தாமணி சிலை அர ...

Read more

பழைய மின் மாற்றியை பொருத்த எதிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் எளந்தகுளம் கிராமத்தில் பழைய மின்மாற்றியை பொருத்த வந்த மின்வாரிய ஊழியர்களை எதிர்த்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரிய அதிகாரிகள், புதிய மின் மாற்றியை பொருத்துவதாக கூறி தங்களிடம் பணம் வசூலித்து விட்டு பழைய மின்மாற்றியை பொருத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். அப்பகுதியில் உள்ள மின்மாற்றி 2 மாத காலமாக பழுதடைந்த நிலையிலேயே இருந்து வந்துள்ளது. இதனால் தங்களது பயிர்களுக் ...

Read more

மேல்மருவத்தூர் சென்ற கணவன், மனைவி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, மேல்மருவத்தூருக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள் வேன், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன், மனைவி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த கிடப்பனூரைச் சேர்ந்தவர்கள், 2 வேன்களில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். முதலில் சென்ற் வேன், வந்தவாசியை அடுத்த பொன்னூர் மலை அருகே வந்தபோது, கட்டுபபாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மரத்தில் ...

Read more

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதிய பிரச்னை

கீழ்பென்னாத்தூர் அருகே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சரியான ஊதியம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் கீக்களுர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை 132 ரூபாய் ஊதியாகமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சென்ற மாதம் 60 ரூபாயும் ...

Read more

மார்கழி மாதம் ஆண்களுக்கு ஆபத்து என வதந்தி

இந்த ஆண்டு மார்கழி மாதப் பிறப்பு, ஆண்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பரவிய வதந்தியால், ‌திருவண்ணாமலை அருகே, பெண்கள் வீட்டு முன் விளக்கேற்றி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையை அடுத்த சேரியந்தல் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பும், வேப்பிலை மீது தீபங்கள் ஏற்றி வைத்து வழிபாடு நடத்தினர். வீட்டிலுள்ள ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விளக்குகள் ஏற்றப்பட்டது. ஞாயிற்றுக் கிழமையில் மார்கழி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top