Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruvannamalai (Page 5)

ஆரணி,திண்டுக்கலில் தங்கம் மற்றும் பணம் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராணுவ வீரரின் வீட்டில் 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அருகே கொங்கராம்பட்டு கிராமத்தில் வசிக்கும் ராணுவ வீரரான பிரகாசம் என்பவரது வீட்டில்தான் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போத ...

Read more

வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரிக்கை

பருவமழை பொய்த்து விட்டதால் தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வந்தவாசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது விவசாயத்திற்கான போதிய நீராதாரம் இல்லை என்பதால் விவசாயம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்கள் ...

Read more

செங்கம் ஜல்லிக்கட்டில் 20பேர் படுகாயம்

திருவண்ணாமலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்‍. திருவண்ணாமலை செங்கம் அருகே உள்ள பரமனந்தல் கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. கொட்டாவுர், பரமனந்தல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 250 காளைகள் பங்கேற்றன. சீறிவந்த காளைகளை இளைஞர்கள் கூட்டம் அடக்க முயன்ற காட்சிகள் பார்வையாளர்கள் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வி ...

Read more

ஆரணி பேருந்து விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 40 பேர் படுகாயம் – ஓட்டுநர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புளிய மரத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 40 பேர் படுகாயமடைந்தனர். ஆரணி அருகே வண்ணாகுளம் என்ற ஊரில்தான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் 40 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வேலூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புள ...

Read more

ஆரணி கைலாயநாதர் கோயில் உற்சவம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டையில் உள்ள கைலாயநாதர் ஆலயத்தில் திருவூடல் உற்சவத்தினை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்‍. உற்சவத்தை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளான அறம்வளர் நாயகியுடன் சிவபெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன.முன்னதாக அதிகாலை 5 மணி அளவில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்த ...

Read more

புகையில்லா போகி கொண்டாட பேரணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே துவக்கி வைத்தார். வரும் ஞாயிறு போகிப்பண்டிகை கொண்டாடப்பட உள்ளது, இதற்காக மக்கள் ரப்பர்‌, பழைய டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதனால் எழும் நச்சுத்தன்மை உள்ள கரும்புகையால் ச ...

Read more

டாஸ்மாக் கடையை எடுக்க வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் கூட்டு ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அங்கிருந்து எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டாஸ்மாக் கடை அருகில் அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, தனியார் மருத்துவக்கல்லூரி, பாலிடெக்னிக் ஆகியவை இருப்பதால் மாணவர்கள் போய் வருவதற்கு சிரமம் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்தனர்‍. மேலும் முக்கிய சாலையில ...

Read more

பேருந்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணம் கொள்ளை

திருவண்ணாமலை அருகே பேருந்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை திருடிய பெண்மணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலையை சேர்ந்த பரமேஸ்வரி என்ற ஆசிரியர் வேலூரில் இருந்த திருவண்ணாமலைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். திடீரென இறங்கும் போது பையில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. உடனே காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். சில திருடர்களின் ப ...

Read more

மலைக்கிராம குழந்தைகளின் கல்வி பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மலைகிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாததால் அங்குள்ள பலநூறு குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. செங்கம் அருகே ஜவ்வாது மலை அடிவாரத்தில் மேல்பட்டு, புலியூர், தென்மலை, அத்திப்பட்டு போன்ற பல கிராமங்கள் உள்ளன. மிதமான தட்பவெப்பநிலையில் மரங்கள் சூழ்ந்த இயற்கை கூடாரமாய் இந்த கிராமங்கள் காட்சி தருகின்றன. இயற்கை அழகை வாரி இறைக்கும் இந்த கிராமங்களில் மலை வாழ் பழங்குடியின மக் ...

Read more

3 மாதங்களாக இருளில் தவிக்கும் கிராமம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 3 மாதங்களுக்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செங்கம் மின் வாரிய அலுவலகத்த்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கோட்டாங்கல் கிராமம்தான் பாதிக்கப்பட்ட கிராமம் ஆகும். இந்த கிராமத்திற்கு மின்சாரம் கொண்டு செல்லக்கூடிய டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களாக ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top